ஜெயலலிதா வேன் மீது கல் வீச்சு; புதிய தமிழகம் தொண்டர் கைது
திருநெல்வேலி:
தென்காசி தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, அவரது பிரசார வேன் மீது கல் ஒன்று விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். வாசுதேவநல்லூர் பகுதியில்வேனுக்குள் அமர்ந்தவாறே அவர் பிரசாரம் செய்தார். அப்போது கல் ஒன்று வேன் மீது வந்து விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பதட்டப்படாத ஜெயலலிதா, விஷமிகளின் தூண்டுதலின் பேரில்சில ரெளடிகள்தான் இதுபோல கல் வீசியுள்ளனர். இதைக் கண்டு நான் பயப்பட மாட்டேன்.
அவர்களுக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். செய்வீர்களா? என்று பேசிய ஜெயலலிதா பின்னர்பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
ஜெயலலிதாவின் வேன் மீது யார் கல் வீசியது என்பது குறித்து போலீஸார் விசாரித்த போலீஸார் புதிய தமிழகம்கட்சித் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதி ஒரு மெகா பொய் சொல்லி இருக்கிறார். மெகா கூட்டணி என்பதால் மெகா பொய்சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு பெரிய கொள்கை கூட்டணி இதுவரை அமைந்தது இல்லைஎன்று கூறியுள்ளார்.
அவரே அண்ணா காலத்தில் இப்படி ஒரு கூட்டணி உருவாயிற்று. ராஜாஜி, கம்யூனிஸ்டு ராமமூர்த்தி இருந்தார்கள்.அதன்பிறகு இப்போதுதான் பெரிய கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து ஆளுகிறவர்களுக்கு அச்சம்,பொறாமை என்கிறார்.
முதலில் இப்படி கூட்டணி ஏற்படவில்லை என்கிறார். பிறகு அண்ணா காலத்தில் இருந்தது என்கிறார். இதுவே ஒருமுரண்பாடு. மேலும் கருணாநிதி ஒரு மகத்தான உண்மையை மறைத்து விட்டார். அன்றைய கூட்டணி ஆட்சியில்இருந்த காங்கிரஸ் கட்சியை நொறுக்க உருவாக்கப்பட்டது.
இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி செத்துப்போன காங்கிரசுக்கு, ஒப்பனை செய்து ஆட்சிப் பீடத்தில் உட்காரவைப்பதற்கான கூட்டணி. எப்படி இரண்டும் சமமாகும்?
ஆளுகிறவர்களுக்கு அச்சம், பொறாமை என்கிறார். யாரைப் பார்த்து யார் அச்சப்படுவது? அச்சம் என்பது என்அகராதியில் இல்லை. சிங்கம் தனியாகவே எந்த பகையையும் சந்திக்கும். குள்ள நரிகள்தான் கூட்டணிஅமைத்துக்கொண்டு வேட்டைக்கு செல்லும் என்று பேசினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications