பா.ம.க. மீது தமிழக அரசிடம் புகார்: ரஜினி முடிவு
சென்னை & கடலூர் & நாகர்கோவில்:
பா.ம.க மீது தமிழக அரசிடம் புகார் தர ரஜினி முடிவு செய்துள்ளார். தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷைசந்திக்க அவர் அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ம.கவினர் தேர்தலுக்கு முன்பும் பின்பும் தனது ரசிகர்களைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக தேர்தல்ஆணையத்திடம் ரஜினி புகார் தந்தார். அப்போது மாநில அரசிடம் புகார் தருமாறு அவரை தலைமைத் தேர்தல்ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் இருப்பதால், தலைமைச்செயலாளரிடமே ரஜினி தனது புகாரைத் தருவார் என்று கூறப்படுகிறது.
பா.ம.கவினர் மீது தாக்குதல்:
பண்ருட்டி அருகே பாமகவினர் மீது ரஜினி ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் இணைந்து தாக்குதல் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குறிஞ்சிப்பாடி யூனியன் செயலாளராக இருப்பவர் பாமகவைச்சேர்ந்த தெய்வக்கண்ணு. இவரும் பாமக முன்னாள் விவசாய அணி செயலாளர் சக்திவேல் மற்றும் அருள்ஆகியோரும் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரஜினி ரசிகர்கள் சிலரும், ஆறுபடை என்பவரின் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் சிலரும்பாமகவினரைத் தடுத்து நிறுத்தித் தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தாக்கியவர்களை போலீஸார்தேடி வருகிறார்கள்.
ரஜினி ரசிகர்களை பா.ம.கவினர் திருப்பித் தாக்கலாம் என்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்களுக்கு அடையாள அட்டை:
இந் நிலையில் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளையும் சேர்ந்த ரசிகர்களுக்கும் பாதுகாப்பு கருதி அடையாள அட்டைகள் வழங்கரஜினி முடிவு செய்துள்ளார்.
அழைத்தாலும் வருவாரா?பா.ஜ.க
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய்- முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பங்கேற்கும் சென்னை பொதுக் கூட்டத்துக்கு ரஜினியைஅழைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும், அப்படியே அழைத்தாலும் அவர் வருவாரா என்று தெரியவில்லை என்றும் தமிழகபா.ஜ.க. கூறியுள்ளது.
பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசுகையில், மே 5ம் தேதி நடக்கும் கூட்டத்துக்குரஜினியை அழைக்கும் திட்டம் ஏதுமில்லை. அப்படியே அழைத்தாலும் அவர் வருவாரா என்று தெரியவில்லை. அவரை அழைத்துதர்மசங்கப்படுத்த விரும்பவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications