ரஜினி படத்தை நிறுத்திய பா.ம.கவினர்.. பாட்சா போயி கோவில் வந்தது டும்..டும்..டும்..

Subscribe to Oneindia Tamil

செய்யாறு & பாண்டிச்சேரி::

பா.ம.கவினர் மிரட்டல் காரணமாக செய்யாறில் உள்ள ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த பாட்ஷா படம்பாதியில் நிறுத்தப்பட்டது, பின்னர் அந்தப் படத்துக்குப் பதிலாக சிலம்பரசன் நடித்த கோவில் படம்திரையிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள செல்வம் தியேட்டரில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம்திரையிடப்பட்டது. மாலைக் காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது, மாவட்ட பா.ம.க. கொள்கை பரப்புச் செயலாளர்போலீஸ் சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் கேபின் அறைக்குள் புகுந்து, படத்தை நிறுத்தச்சொல்லி கலாட்டா செய்தனர்.

நிறுத்தாவிட்டால், தியேட்டரை சேதப்படுத்துவோம் என்று மிரட்டினர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.இதனையடுத்து தியேட்டரில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. பா.ம.கவினரின் மிரட்டல் குறித்து தியேட்டர்உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர் விரைந்து வந்து பா.ம.கவினரிடம் சமாதானம் பேசினார். இந்த ஒரு காட்சியை மட்டும் ஓட்டி விடுகிறோம்.அடுத்த காட்சியில் வேறு படத்தை திரையிடுகிறோம் என்று கூறினார். இதனால் சமாதானமடைந்த பா.ம.கவினர்திரும்பிச் சென்றனர். பின்பு பாட்ஷா படம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது.

இரவு 10 மணிக் காட்சியில் பாட்ஷாவுக்கு பதில் சிலம்பரசன் நடித்த கோவில் படம் திரையிடப்பட்டது.

சத்யநாராயணா ஆலோசனை:

இந் நிலையில் இன்று பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளையும் சேர்ந்த ஆண், பெண் ரஜினி ரசிகர்கள் சென்னையில் சத்யநாராயணாவுடன்ஆலோசனை நடத்தினர்.

காலையில் தொடங்கி மாலை வரை இந்த ஆலோசனை நடந்தது. அப்போது பேசிய பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி நேரடிகாகக்களத்தில் இறங்க வேண்டும், பிரச்சாரத்துக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். மேலும் பா.ம.கவினரிடம் இருந்து காத்துக்கொள்ள போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் பா.ம.கவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, ரசிகர்களை அதிமுகவினர் எப்படி நடத்துகின்றனர் போன்ற விவரங்களைசத்யநாராயணா கேட்டறிந்தார்.

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த இக் கூட்டத்துக்கு வந்த ரசிகர்கள் பின் வாசல் வழியாக உள்ளே அழைத்துச்செல்லப்பட்டனர். ரசிகர்கள் அனைவரும் சத்யநாராயணாவுக்கு மாலை, சால்வைகள் அணிவித்தனர்.

நாளை இந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் தானே நேரடியாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுகுறித்து ரஜினி முடிவு செய்வாராம்.

ரசிகர்களின் ரத யாத்திரை:

இதற்கிடையே பாண்டிச்சேரியில் ரஜினி ரசிகர்கள் ரத யாத்திரை மூலம் பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்திற்குஆதரவாக வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட ஜீப் ஒன்றை ரதம் போல மாற்றி அதில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ரஜினி, வாஜ்பாய்படங்கள், தாமரைச் சின்னம், பா.ஜ.க. கொடியுடன் பா.ஜ.க. மரபை பின்பற்றி ரஜினி ரசிகர்கள் மேற்கொண்டுள்ள இந்த ரதயாத்திரை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.கவினருக்கு ஜாமீன்:

இந் நிலையில் மதுரையில் ராமதாசுக்குக் கருப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்டபா.ம.கவினர் 7 பேருக்கும் இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், இவர்கள் ஹைதராபாத்தில் தங்கியிருக்கவேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+