நெல்லை: வசந்த் அன் கோ-வில் தீவிபத்து: ரூ.1 கோடி நாசம்
நெல்லை & சென்னை:
பாளையங்கோட்டையில் உள்ள வசந்த் அன் கோ நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடிமதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது.
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் தம்பியுமானவசந்த்குமார் தமிழகம் முழுவதும் வசந்த அன் கோ என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைநிலையம் நடத்தி வருகிறார்.
இந்தத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடும் முயற்சிகள் செய்தார். இறுதியில்தனுஷ்கோடி ஆதித்தனுக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது.
இந் நிலையில் பாளையங்கோட்டை ஊசிக் கோபுரம் எதிரே வசந்த அன்ட் கோ நிறுவனத்தில் அதிகாலை 5மணியளவில் தீப் பிடித்துக் கொண்டது. உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தர். ஆனால், அதற்குள் 32 கலர் டி.விக்கள்,10 வாஷிங் மெஷின், 2 பிரிட்ஜ்கள், 2 ஏ.சி. மெஷின்கள் உள்பட கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள்எரிந்து சாம்பலாகிவிட்டன.
சுமார் ரூ.1 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மேலாளர் ரெக்ஸ் தெரிவித்துள்ளார். மின்கசிவு காரணமாகஇந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சதி வேலை ஏதேனும் நடந்திருக்குமா? என்றகோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தீவிபத்து: பல கோடி சேதம்
இதேபோல் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் கொடவுனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய்மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் ரெடிங்டன் என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் உள்ளது.வெளிநாட்டிலிருந்து கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம்.
நிறுவனத்தின் கொடவுன் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ளது. இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில்கொடவுனில் இருந்த ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள், உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலாயின.
ஐந்து தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தன.ஆயினும் ஒரு சில கம்ப்யூட்டர்களை மட்டும் அவர்களால் மீட்க முடிந்தது. மற்ற அனைத்தும் எரிந்து கருகிவிட்டன. பல கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications