அமெரிக்க இமிக்ரேசன் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்கா செல்வதற்கான விண்ணப்பக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் இமிக்ரேஷன் அலுவலக செய்தித் தொடர்பாளர் கிறிஸ்பென்ட்லே கூறியதாவது:
குடியுரிமை, இமிக்ரேசன் பணிகளால் அமெரிக்காவுக்கு நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்த கடந்த ஜனவரி மாதம்அரசு முடிவெடுத்தது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது என்றார்.
புதிய கட்டண விகிதப்படி, அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் 260 டாலரிலிருந்து 320 டாலராகஉயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் 255 டாலரிலிருந்து 315 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
குடியுரிமை பெற்றவர் தனது மனைவியை அழைத்து வருவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் 115 டாலரிலிருந்து165 டாலராக உயர்ந்துள்ளது. நிரந்தர குடியுரிமை அட்டையை புதுப்பிப்பதற்கான கட்டணம் 130 டாலரிலிருந்து185 டாலராக உயர்ந்துள்ளது.
இது தவிர கைரேகை பதிவுக் கட்டணம் 50 டாலரிலிருந்து 70 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கக் குடியுரிமை அலுவலகத்தின் மோசமான நிர்வாகத்தால், லட்சணக்கானோர் விண்ணப்பம் செய்துவிட்டுகாத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தை மேம்படுத்தாமல், கட்டணங்களை மட்டும் உயர்த்தியிருப்பதுகுடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் சிரமத்தை மேலும் அதிகப்படுத்தும் என கட்டண எதிர்ப்பாளர்கள்கூறுகின்றனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications