கருத்து கணிப்புகளை பா.ஜ.க. நம்பவில்லை: யஷ்வந்த் சின்ஹா
சென்னை:
கருத்துக் கணிப்புகளை பாரதீய ஜனதாக் கட்சி நம்பவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகள் நம்பத் தகுந்தவயாைக இல்லை. கருத்துக் கணிப்புகள் அடிப்படையில்எந்தக் கட்சியும் தனது கொள்கை, திட்டத்தை வகுப்பதில்லை.
கருத்துக் கணிப்புகளை மீறி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். கருத்துக் கணிப்புகளை பா.ஜ.க.நம்பவில்லை.
கருத்துக் கணிப்பாளர்கள் சில நாட்கள் மட்டுமே கனவில் மிதக்கலாம். மே 13ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டுமுடிவுகள் தெரியப் போகிறது. அதன் பிறகு அனைத்தும் தெளிவாகி விடும்.
நடிகர்கள், நடிகயரை நம்பி பா.ஜ.க. இல்லை. அவர்களது கவர்ச்சியை வைத்து வெற்றிக்காக நாங்கள்பாடுபடவில்லை.
இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இலங்கைஅமைதி முயற்சிகள் தொடர்பாக தேர்தலுக்குப் பிறகு ஆக்கப்பூர்வமான முறையில் இந்தியா தொடர்ந்துமுயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications