கன மழையில் திணறும் தமிழகம் !
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலத்தின் விளைவாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை நகரில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
விடிய விடியப் பெய்த மழை இன்றும் தொடர்கிறது. இதனால் சென்னை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி புதிதாக போடப்பட்ட பல சாலைகள் சேதமடைந்து பல்லைக் காட்டத் தொடங்கியுள்ளன. பல பகுதிகளில்தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் சாலையோர மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
இதேபோல, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோவை, நாகை, ராமநாதபுரம் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்றுமுதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்குத் தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications