கூவாகத்தில் இன்று அரவாணிகளின் அழகிப் போட்டிவிழுப்புரம்:விழுப்புரத்தில் குவிந்துள்ள அரவாணிகளில் சிலர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் இன்று அரவாணிகளின் அழகிப் போட்டி நடக்கிறது.

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கானஅரவாணிகள் இங்கு குவிந்துள்ளனர்.

குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகர்களில் இருந்தும் தமிழகத்தில் மதுரை, சென்னை,கோவை, சேலம் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள இவர்கள் உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம் பகுதி விடுதிகளில்தங்கியுள்ளனர்.

விழாவுக்கு வரும் இவர்கள் பாலியல் தொழில் செய்வதும் உண்டு. இதற்காக சுற்றுப் பகுதிகளில் இருந்துஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெரிசுகளும் இங்கு குவிந்துள்ளனர். இதையடுத்து போலீஸ் கண்காணிப்புதீவிரபபடுத்தப்பட்டுள்ளதோடு, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றன.

அரவாணிகளின் சமூக மேம்பாட்டுக்கான கருத்தரங்குகள், பட்டிமன்றம், விவாத மேடைகளுக்கும் மாவட்டநிர்வாகமும் பல சமூக நல அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன. மேலும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுவருகின்றன.

சித்ரா பெளர்ணமியான நாளை (செவ்வாய்க்கிழமை) அரவாணிகள் கூத்தாண்டவர் சாமியை திருமணம் செய்துதாலி கட்டிக் கொள்வர். மறுநாள் தாலியை அவிழ்த்துவிட்டு, விதவைக் கோலம் பூண்டு அழுகையுடன் கோவிலைவிட்டு வெளியேறுவர். இந்த நிகழ்ச்சியில் 12,000 அரவாணிகள் வரை பங்கேற்க உள்ளனர்.

Eunuchs

விழுப்புரத்தில் குவிந்துள்ள அரவாணிகளில் சிலர்
இன்று இவர்களுக்கு அழகிப் போட்டி நடக்கிறது. மிஸ் கூவாகம்-2004 என்ற பெயரில் நடக்கும் இப் போட்டுகே.சி.பி. திருமண மணடபத்தில் நடக்கிறது. தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீனபந்து உள்ளிட்டஅரசு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே நிருபர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரவாணிகள் சங்கத் தலைவர் ஆஷா பாரதி கூறுகையில்,

அரவாணிகள் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள அரவாணிகளுக்குசட்டப்படி அனுமதி தர வேண்டும், இதற்காக சட்டப் பிரிவு 377ல் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+