தேர்தலுக்கு பின் அரசு ஊழியர்களை பழி வாங்க மாட்டேன்: ஜெ. உருக்கம்
சென்னை:
தேர்தலுக்குப் பின்பு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாதுஎன்று முதல்வர் ஜெயலலிதா உறுதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு எதிரானது என்பது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவருகின்றன.
இக் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஒரு சில அலுவலர் சங்கங்கள் மற்றும்ஆசிரியர் அமைப்புகள் துண்டுப் பிரசுரம், பத்திரிகைச் செய்தி மற்றும் பிரசாரங்கள் மூலம் பல்வேறு வகையானவதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
அரசு ஊழியர்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்போ அல்லது காழ்ப்புணர்ச்சியோ கிடையாது என்பதைபிப்ரவரி 10-ம் தேதி சட்டசபையில் நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.
கடந்த திமுக அரசால் மாநிலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியையும், வறட்சியினால் ஏற்பட்ட துன்பங்களையும் அரசுஅலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என்எண்ணம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து,அரசுடன் ஒரு மோதல் போக்கை ஏற்படுத்தின.
ஆனாலும் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டு சுமுகமான உறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பின் அர சு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றுஎதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநல நோக்கத்தில் செய்யப்படும் இந்தப் பொய்ப் பிரசாரத்துக்கு அரசுஅலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரையாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
தாஜா செய்வது ஏன்?
இதற்கிடையே தேர்தல் பணிகளில் அமர்த்தப்படும் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பணியில்தமிழக அரசு பெரும் குழப்பம் செய்து வருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அரசால் டிஸ்மிஸ்செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடாமல்தவிர்க்க அரசு முயன்று வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்குப் பதிலாக மத்திய அரசு ஊழியர்களை இந்தப் பணியில் அமர்த்தலாமாஎன்று தமிழக அரசு விவாதித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு ஊழியர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் மாநில அரசு ஊழியர்களைத் தான் நியமித்தாக வேண்டும்.
இதனால் அவர்களை தாஜா செய்யும் வகையில் ஜெயலலிதா இந்த அறிக்கையைவெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications