மீனாட்சி திருக்கல்யாணத்தை "மிஸ்யூஸ்" செய்த கட்சிகள்
மதுரை:
மதுரையில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது, அதை பயன்படுத்தி பக்தர்களிடம் ஓட்டு வேட்டையாடினர்இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் மதுரையில்விமர்சையாக நடந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியைக் கான அதிகஅளவு பக்தர்கள் குவிந்திருந்தனர்.
திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காக மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும்பல்வேறு மோர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பா.ஜ.க., அதிமுகவுக்கு ஆதரவாக இயங்கி வரும் இந்துமுன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஏராளமான மோர்ப் பந்தல்களைஅமைத்திருந்தனர்.
இந்த மோர்ப் பந்தல்களில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை, அதிமுகவின் சின்னமான இரட்டை இலை,ரஜினிகாந்த்தின் படம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. அத்தோடு இல்லாமல், மோர் வாங்கிக் குடிக்கும்பக்தர்களிடம் மறந்துடாம ஓட்டுப் போட்டுடுங்க என்ற சின்னங்களைக் காட்டி கூற பந்தல்களில் இருந்தவர்கள்தவறவில்லை.
இந்த பந்தல்களில் கட்சிகளின் கொடிகளையும் அவர்கள் கட்டியிருந்தனர். அம்மனின் திருக்கல்யாணத்தைதங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இவர்களை மீனாட்சி மன்னிக்க மாட்டாள் என உண்மையானபக்தர்கள் மனம் நொந்து கூறி சென்றனர்.












Click it and Unblock the Notifications