சரவண பவன் ராஜகோபால் வேலூர் சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சென்னை மத்திய சிறையிலிருந்து வேலூர் மத்திய சிறைக்குமாற்றப்பட்டுள்ளார்.
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு மற்றும் கடத்தல், அடியாட்களை வைத்து மிரட்டியது,தாக்கியது தொடர்பான வழக்குகளில் மொத்தம் 10 ஆண்டுகளுக்கு ராஜகோபாலுக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராஜகோபால் உள்ளிட்ட 12 பேர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ராஜகோபால், காசி, ஜாகிர் உசேன், சேது, தமிழ்ச் செல்வன் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் தற்போதுசென்னையிலிருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications