ரஜினி மனம் திறப்புக்கு மக்களிடம் வரவேற்பில்லை: சத்யநாராயண ராவ் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ம.கவுக்கு எதிராக ரஜினி மனம் திறந்து பேசிய பேச்சுக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்றுரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதே போல பா.ம.கவினரின் தேர்தல் வேலைகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் ராவ்கூறியுள்ளார்.

மனம் திறக்கிறேன் என்று சினிமா ஸ்டைல் வசனங்களை அடுக்கி ரஜினி ஏதேதோ சொன்னார்.கடைசியில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியாமல் பாபா படம் மாதிரி ஆகிவிட்டது.

இதனால் ரஜினி.. ரஜினி என்று பத்திரிக்கைகள் செய்திகள் போட்டாலும் மக்களிடம்நோ-ரியாக்ஷன். ரஜினியின் அறிக்கையை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதனால்அமைதியாக திங்க் செய்வதற்காக ரிஷிகேஷ் போய் வந்தார் ரஜினி.

ஊருக்குத் திரும்பியவரை சந்தித்த ரசிகர்கள், பிரச்சாரத்துக்கு நேரில் வந்தால் தான் ஏதாவது பலன்இருக்கும், அறிக்கை மக்களைப் போய்ச் சேரவில்லை என்று மனம் திறந்து கூறிவிட்டனர்.

இந் நிலையில் சத்யநாராயண ராவ் மூலமாக ரஜினி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைவிவரம்:

ரஜினி மனம் திறந்து வெளியிட்ட அறிக்கை எல்லா பத்திரிக்கைகளிலும் வெளி வந்தும் கூட, அது எல்லாமக்களையும், குறிப்பாக தாய்மார்களிடம் அந்தச் செய்தி முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்று எங்களுக்குத்தகவல்கள் வந்து கொண்டுள்ளன.

இதனால் ரஜினி மனம் திறந்து அளித்த பேட்டியை-அறிக்கையை கேஸட்டுகளாகப் போட்டு, அதை எங்கள்ரசிகர்கள் மூலம் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் வினியோகிக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு அனுமதியளித்த எங்கள் அன்பார்ந்த தலைவர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் !!!.

கடந்த வாரம் வேலூர் மாவட்டம் செய்யாறில் செல்வம் பேரடைஸ் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ரஜினியின் பாட்ஷா படத்தை பா.ம.க தொண்டர்களும், சில பிரமுகர்களும்(பெயர்களை சொல்ல நாங்கள் விரும்பவில்லை தடுத்து நிறுத்தி வேறு படத்தை ஓட்டச்செய்துள்ளனர்.

இதனால் பா.ம.கவினருக்கு மக்களிடையே இன்னும் கெட்ட பெயர் தானே வரும் (!) என்றுஎங்களிடம் தொலைபேசியில் பலர் வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ம.க. தலைமைக்குத் தெரியுமோ, தெரியாதோ எங்களுக்குத் தெரியாது. தொடர்ந்து நடக்கும்இதுபோன்ற சம்பவங்களை, நீங்கள் (பா.ம.க. தலைமை) தெரிந்திருந்தும் கண்டிக்காமல் இருந்தால்,நாங்கள் வருத்தப்படுகிறோம்.

உங்களுக்கு (பா.ம.க. தலைமை) தெரியவில்லை என்றால் அதை மிகப் பணிவுடன் உங்கள்கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

எங்கள் அன்பார்ந்த தலைவர் ரஜினி புதுப் படத்தைத் துவக்கியிருக்கிறார். பட வேலைகளில் அவர்கவனம் செலுத்துவார். பா.ம.கவினர் அவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்களின் அன்றாடப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வேலைகளில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். உங்கள்வேலையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். நீங்கள் எங்கள் வேலையில் குறுக்கிடாதீர்கள்.

இவ்வாறு கெஞ்சலும், கொஞ்சோண்டு மிரட்டலுமாக சத்யநாராயண ராவ் அறிக்கைவெளியிட்டுளளார்.

கேசட் ரிலீஸ்:

இந் நிலையில் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் வழங்குவதற்காக அந்தத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார்1,000 ரசிகர்களிடம் 1.8 லட்சம் கேசட்டுகளை சத்யநாராயண ராவ் வழங்கினார்.

தொகுதிக்கு தலா 30,000 கேசட்டுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கேசட்டின் முதல் கவரில், தம்பி புறப்படடா..உங்கள் ரஜினி மனம் திறக்கிறார் என்றும் பின் பக்கத்தில் நதிகள் இணையட்டும்.. தமிழகம் செழிக்கட்டும்,சிந்தியுங்கள்.. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்ற வசனமும் அச்சிடப்பட்டுள்ளது.

கேசட்டுக்களை ரசிகர்களிடம் வழங்கிய ராவ் பேசுகையில், ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். இந்தகேசட்டுகளை மக்களுக்குப் போட்டுர் ராட்டி ரஜினியின் கருத்தை மக்களிடம் விளக்குவார்கள். தலைவர்ரஜினிகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. தேவைப்படடால் நான் பிரச்சாரத்துக்குச்செல்வேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+