திருவள்ளூர் கலெக்டரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள், அதிகாரிகள் மட்டத்தில் குளறுபடிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான்.ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முறைகேடுகள், குளறுபடிகள் செய்த பல அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுத்து வருகிறது தேர்தல் ஆணையம்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணுசாமி, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார்ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும் தாசில்தார்கள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனை மாற்றம் செய்து தலைமை தேர்தல்ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில், துணை தேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக பல்வேறு குளறுபடிகள்நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. இது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தபோது குளறுபடிகள் நடந்ததுஉறுதியானது.
இதையடுத்து சந்திரமோகனை இடமாற்றம் செய்ய உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
இது போலவே மதுரை, ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களும் அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார்கள் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications