முற்போக்கு சிந்தனையே இல்லாத கூட்டணி: ஜெ. தாக்கு
வேலூர்:
முற்போக்கு சிந்தனையே இல்லாத கூட்டணி தான் திமுக கூட்டணி என முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சுப்பிரமணிக்கு ஆதரவாக கொட்டும் மழையில்வேனுக்குள் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
நாட்ராம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் அன்புச் சகோதரியான என்னை பெரும் வெற்றி பெறச் செய்துமுதல்வராக்கினீர்கள். உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருவதோடு,இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறேன்.
அடுத்த பிரதமர் யார் என்பது தான் 100 கோடி இந்தியர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வி.அனுபவம் மிக்க வாஜ்பாயா? ஏதும் தெரியாதா அன்னிய நாட்டு இறக்குமதியான ஆன்டானியோமொய்னோவா? யார் பிரதமராக வேண்டும்?
அன்னியப் பெண்மணியான சோனியா, நம் நாட்டை ஆள அனுமதிக்கலாமா?
கொள்கையில்லா கூட்டணி வைத்துள்ள கருணாநிதி, வெட்டியாய் மதிமுகவை நடத்திக்கொண்டிருக்கும் வைகோ, அடுத்த கூட்டணிக்கு ஓடிப் போவதையே தொழிலாகக் கொண்டராமதாஸ். மாநிலத்துக்கு ஒரு நீதி பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோருக்கு பாடம் புகட்டுங்கள்.
முற்போக்கு சிந்தனையே இல்லாமல் இவர்கள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிஅமைத்திருக்கிறார்கள்.
என் உயிரினும் மேலான தமிழ் மக்களே.. உலக அளவில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க வாஜ்பாய்தான் பிரதமராக வேண்டும் என்றார் ஜெயலலிதா.
கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை நெருங்கி வரும் நிலையிலும், தனது ஆட்சியின்சாதனை என்று எதையும் ஜெயலலிதா சொல்லி ஓட்டு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications