மூடப்பட்ட பெரியார் சிலையை திறக்க அரசுக்கு கருணாநிதி கெடு
சென்னை:
புதுக்கோட்டையில் தமிழக அரசால் மூடி, சீல் வைக்கப்பட்ட பெரியார் சிலை வரும் 10ம் தேதிக்குள்திறக்கப்படாவிட்டால், போராட்டத்தில் குதிக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை திராவிடர் கழக அலுவலக வளாகத்தில் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் பெரியார் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 7ம் தேதி திறக்கப்பட இருந்தது.
இந் நிலையில் சிலைக்கு அரசிடம் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரெனசிலையை மூடி, சீல் வைத்தனர்.
இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடத்தில் தான் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.வரும் 10ம் தேதிக்குள் அந்த சீல், அதே அதிகாரிகளால் அகற்றப்படாவிட்டால் அடுத்த நாள் திராவிடஇயக்கத்தினர் ஒன்று கூடிப் பேசுவோம்.
பெரியார் எங்களுக்கு ஊட்டிய சுயமரியாதை எத்தகையது என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடவடிக்கையில்இறங்குவோம். திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் இது குறித்துப் பேசுவேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சிலைக்கு சீல் வைக்கப்பட்டதையடுத்து அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications