ஜெயலலிதாவை வாட்டுகிறது தேர்தல் ஜுரம்: வாசன்
மயிலாடுதுறை:
அதிமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வாசன் கூறினார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யருக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் வாசன்பேசியதாவது:
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மிக வலிமையான கூட்டணியை அமைய காரணமாகஇருந்தவர் கருணாநிதி தான். சோனியாவுடன் ஒரே ஒரு தொலைபேசிப் பேச்சு மூலம் மாபெரும்கூட்டணியை அமைத்துக் காட்டினார்.
கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலத்தைப் பார்த்தும், மக்கள் நமக்குத் தந்து வரும் ஆதரவைப்பார்த்தும் அதிமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. இதனால் தான் வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சியினரை வசை பாடி வருகிறார் ஜெயலலிதா.
பா.ஜ.க. அரசு மட்டுமல்ல, ஜெயலலிதா அரசும் மாற்றப்பட வேண்டிய ஒன்று தான். முதலில் மே 10ம்தேதி வாஜ்பாய் அரசை அகறறுவோம். அதன் பின்னர் தமிழகத்திலும் நிச்சயம் மாற்றம் வரும்.
மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்து வைத்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, என்னசெய்தாவும், எவ்வளவு பணத்தை அள்ளிக் கொட்டினாலும் வெற்றி பெற முடியாது.
தனது சாதனை என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி ஜெயலலிதா ஓட்டு கேட்கட்டும், பார்க்கலாம்.வாஜ்பாய் முகமூடியைப் போட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார். முகமூடிகளை கிழித்து எறிவோம்.
சோனியாவை வெளிநாட்டவர் என்கிறார்கள். இந்தியாவுக்காக தனது கணவரை இழந்த,இந்தியராகவே வாழும் ஒரு பெண் அவர். இதை எத்தனை முறை சொன்னாலும் ஜெயலலிதாவுக்குஉறைக்காவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? என்றார் வாசன்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications