கலாமின் பெயரைச் சொல்லி...
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
வந்தவாசி தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அப்துல் கலாம் பெயரைச் சொல்லிஓட்டு கேட்கின்றனர் அதிமுகவினர்.
இத் தொகுதியில அதிமுக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலையில் சில பகுதிகளில் முஸ்லீம்கள்அதிகம் வசிக்கின்றனர்.
இப் பகுதிகளில் செல்லும் அதிமுகவினர், இஸ்லாமியரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்தியவர் பிரதமர்வாஜ்பாய்தான். அவரது ஆட்சி நீடிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறார்கள்.
அதிமுகவினரின் இந்தப் பிரசாரம் முஸ்லீம்களைக் கவரவில்லை என்பதுதான் இங்கு முக்கிய விஷயம். ஜனாதிபதிக்கு ஏன் மதச்சாயம் பூசுகிறீர்கள் என்று கேட்டு அதிமுகவினரை முஸ்லீம்கள் திட்டி, திருப்பி அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications