சென்னை விமான நிலையம் கூரை இடிந்து முன்னாள் நீதிபதி காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு பக்கக் கூரை இடிந்து விழுந்ததில் உச்ச நீதிமன்றமுன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காயமடைந்தார்.
ரத்னவேல் பாண்டியனின் மகள் இன்று லண்டனுக்குப் புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக வந்தரத்னவேல் பாண்டியன் விமானம் புறப்படுவதை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார்.அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ரத்னவேல் பாண்டியன் காயம் அடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்குஅழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த பார்த்தபோது, அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதுதெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications