சோனியா கூட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு: வாசன் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியுடன் சென்னையில் சோனியா காந்தி கலந்து கொள்ள இருக்கும் பிரசாரக் கூட்டத்தைத்தடுக்க தமிழக அரசு இடையூறு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் கூட்டாக பேசும் சென்னை தீவுத் திடலில் வரும் 7ம் தேதிகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம்நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடந்தது. இதில்காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ஜனார்தன ரெட்டி, புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயண சாமிஉள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வாசன் கூறுரையில்,

சோனியா காந்தியும், கருணாநிதியும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் தீவுத் திடலில் நடைபெறவுள்ளது. அந்தக்கூட்டத்தைத் தடுக்க முட்டுக் கட்டைகள் போடும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

முதலில் தீவுத் திடலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு எங்களிடம் ஒப்படைப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.ஆனால் இப்போது 6ம் தேதி நள்ளிரவுக்கு மேல்தான் ஒப்படைக்க முடியும் என்று கூறுகிறார்கள். கேட்டால்வாஜ்பாய்-ஜெயலலிதா கூட்டத்துக்குப் போடப்பட்ட பந்தலைப் பிரிக்க, விளக்குகளை அகற்ற 6ம் தேதிநள்ளிரவாகிவிடும் என்கின்றனர்.

இதன் மூலம் கூட்டத்தைத் தடுக்க தமிழக அரசு குறுக்கு வழியில், குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதுதெரிகிறது. இதையெல்லாம் முறியடித்து கூட்டத்தை நடத்திக் காட்டுவோம். அதிகாரிகள் முறையாக நடந்துகொள்வது நல்லது.

எங்கள் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.தொண்டர்களும் தமிழகம் முழுவதும் இருந்தும் வருவார்கள்.

தமிழகத்தில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து நாளை தெரிய வரும். அதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார் வாசன்.

எம்.ஜி.ஆருக்கு விரோதமாய் ஜெ

இதற்கிடையே சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ராசிபுரத்தில் போட்டியிடும் காங்கிரஸ்வேட்பாளர் ராணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

காவிப் பிரச்சினையில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மென்மையான அணுகுறை கடைப்பிடிக்கப்பட்டது.தொலைபேசியில் பேசியே காவிரி நீரைப் பெறும் அளவுக்கு கர்நாடகத்துடன் நட்புறவை வளர்த்திருந்தார்எம்.ஜி.ஆர்.

ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. இந்த அம்மையாருக்கு நல்ல அணுகுமுறையேதெரியவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, தடித்த வார்த்தைகளால் திட்டுவது என மிகத் தவறானபாதையில் போய்க் கொண்டுள்ளார் ஜெயலலிதா என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+