ரூ. 10 லட்சம் டி.வி. பெட்டிகளுடன் லாரி கடத்தல்; 3 பேர் கைது
விழுப்புரம்:
சென்னையிலிருந்து லாரி மூலம் கோவை கொண்டு செல்லப்பட்ட ரூ 10 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள்அடங்கிய லாரி கடத்திச் செல்லப்பட்டது. லாரியைக் கடத்திய சென்னையைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தரமணியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி கிட்டங்கியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப்பெட்டிகள் லாரி மூலம் கோவைக்கு அனுப்பப்பட்டது. லாரி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது காரில் வந்த சிலர் லாரியை மடக்கி நிறுத்தினர்.
தங்களை வருமான வரி அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட அவர்கள் லாரியை சோதனையிடுவது போல நடித்தனர். இந்நிலையில் அவர்களில் சிலர் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கத்தி முனையில் காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர். மற்றவர்கள்லாரியை கடத்திச் சென்றனர்.
லாரி டிரைவர் மற்றும் கிளீனரை புதுவை அருகே கீழே தள்ளி விட்டு காரில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுதொடர்பாகஉளுந்தூர்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சென்னையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். தொலைக்காட்சிகளுடன் கடத்தப்பட்டலாரியும் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications