மத்தியில் வாஜ்பாய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பிரதமர் வாஜ்பாயையும், ரஜினியின் புதிய படமான ஜக்குபாயையும் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் அடித்துள்ளசுவரொட்டிகள் மதுரையை கலக்கி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுக்கு தனது ஆதரவு என்று தெரிவித்துள்ளார். இந் நிலையில் புதிய படத்தையும் அவர்விரைவில் தொடங்கவுள்ளார்.

ஜக்குபாய் என்று ரஜினியின் புதிய படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக ஜக்குபாய் என்றுபெயர் வைத்துள்ளார்களோ தெரியாது, ஆனால் ஜக்குபாய் என்ற பெயரை மதுரை ரசிக்கள் மகாபுத்திசாலித்தனமாக பயன்படுத்தி போஸ்டர்கள் அடித்துவிட்டனர்.

ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில், நதிகள் இணையட்டும், இந்தியா ஒளிரட்டும் என்ற ரஜினிகாந்த்தின்வாசகங்கள் உள்ளன. அத்தோடு, ஹைலைட்டாக, மத்தியில் வாஜ்பாய் ஆட்சி, தமிழகத்தில் ஜக்குபாய் ஆட்சி என்றுபிரசுரித்துள்ளனர்.

இதன் மூலம் அடுத்த சட்டசபைத் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றுதங்களது தலைவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர் மதுரை ரசிகர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+