சோனியா கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு: வாசன்
சென்னை :
சென்னை தீவுத் திடல் மைதானத்தில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னைக்கு சோனியா காந்தி வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று இரண்டாவது நாளாகமேலிடத் தலைவர்களான ஜனார்த்தனன் ரெட்டி, தல்ஜீத் சிங் ஆகியோருடன் வாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாளை மாலை 6 மணிக்கு சோனியா காந்தி சென்னை வருகிறார்.விமான நிலையத்திலிருந்து நேராக அண்ணா அறிவாலயம் செல்லும் அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியைசந்திக்கிறார்.
பின்னர் இரவு 7 மணிக்கு தீவுத் திடலுக்கு செல்லும் அவர் அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.அவருடன் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சோனியா காந்திக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னைையில் அவரது கூட்டம்நடைபெறவிருக்கும் மேடையை சிறப்பு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவில்லை. அதற்கான செலவைஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பாதுகாப்பு காரணத்தைக் கருத்தில் கொண்டு அந்த மேடையை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்வதுகண்டிக்கத்தக்கது. இது நல்ல அரசியல் கலாச்சாரம் அல்ல. பாதுகாப்பு என்ற விஷயத்தில் அரசின்காழ்ப்புணர்ச்சிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. இவ் விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு நல்ல எடுத்துக்காட்டுஅல்ல.
நதி நீர் இணைப்புக்காக காங்கிரஸ் ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறியிருப்பதுகண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு ஆட்சிக்காலத்திலும் நதி நீர் இணைப்புக்கு பலவிதநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் வாசன்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications