முன் ஜாமீன் கேட்டு எஸ்.எஸ்.சந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை:
சேலம் கன்னங்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக திமுக சார்பில் தரப்பட்ட புகார்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1ம் தேதி சேலம் அருகே கன்னங்குறிச்சியில் எஸ்.எஸ்.சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது திமுக தலைவர்கருணாநிதியைத் தரக்ண்றைவாக பேசியதற்கு, அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பிலும்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் திமுகவினர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் தன்னைக் கைது செய்தால் முன் ஜாமீன்வழங்க வேண்டும் என்று எஸ்.எஸ்.சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1ம் தேதி இரவு சேலம் கன்னங்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம்செய்தேன். அப்போது நான் கருணாநிதியை தரக்குறைவாக பேசியதாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு எனது தூண்டுதலின் பேரில் திமுகவினர் தாக்கப்பட்டதாகவும், இதில் திமுகவினர் காயமடைந்ததாகவும் என்மீது திமுகவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் திமுகவினர் தான் முதல்வர் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசினார்கள். எங்களை தாக்க முயற்சித்தனர்.என்னை மீது ஒரு அரிவாள் வீசப்பட்டது. ஆனால், நான் தப்பி விட்டேன்.
நடந்ததற்கு மாறாக நான் தரக்குறைவாகப் பேசியதாகவும், திமுகவினரைத் தாக்க தூண்டியதாகவும் என் மீதுகொலை முயற்சி உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் என்னைக் கைது செய்தால் எனது நன்மதிப்பு பாதிப்படையும். எனவே,எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications