காங்கிரஸை நம்பாதீர்கள்: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியை நம்பி வாக்களித்தால், முன்பு போல நிலையற்ற ஆட்சிக்கு அது வித்திட்டு விடும் என்று பிரதமர்வாஜ்பாய் எச்சரித்துள்ளார்.

வாஜ்பாய் சென்னையில் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். தீவுத் திடல் மைதானத்தில் நடந்த கூட்டத்தில்வாஜ்பாய் பேசுகையில்,

மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்பது காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்கு தெரியும்.ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்காக மக்களை குழப்பிக்கொண்டுள்ளார்கள்.

நாட்டை மீண்டும் நிலையற்ற, குழப்பமான நிலைக்கு கொண்டு செல்ல அவர்கள் முயலுகிறார்கள். அவர்களிடம்ஆட்சியைக் கொடுத்தால் அதுதான் நடக்கும். இந்தத் தேர்தலில் மக்கள் கொடுக்கும் தீர்ப்பு, அடுத்த ஆறுஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதாக அமையும்.

நாடு வளர்ச்சி அடைய வேண்டுமா அல்லது நிலையில்லாமல் தவிர்க்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டிய நேரம் இது.

எங்களிடம் எந்த மறைமுகத் திட்டமும் இல்லை. மற்றவர்களைப் போலவே இந்தியா முஸ்லீம்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மக்களிடையே பா.ஜ.க. ஒரு மதவெறி பிடித்த கட்சி என்பது போலகாங்கிரஸ் தலைவர்கள் தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

நான் தினசரி ஒன்று பேசுகிறேன், குழப்பவாதி, என்னை நம்பி ஓட்டுப் போட வேண்டாம் என்று வாக்காளர்களிடம்என்னைப் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்து வருகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு.

காற்றின் திசைக்கேற்ப மாறும் திசைமானி அல்ல நான். மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கும், எனக்கு உள்ளசெல்வாக்குக்கும், எனது செயல்பாடுகளே காரணம். ஜனநாயகத்திற்கும், கடமைக்கும் நான் அதிக முக்கியத்துவம்கொடுத்ததால்தான் இந்த செல்வாக்கு கிடைத்துள்ளது.

தமிழக மக்கள் தேசிய சிந்தனையுடன் வாக்களிக்க வேண்டும். இங்கு நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். மத்தியில்நிலையான ஆட்சியை அளிக்க வல்ல கட்சிக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். அதற்குப் பிரதிபலனாகதமிழக நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன் என்றார் வாஜ்பாய்.

முன்னதாக திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்களைஆதரித்துப் பேசினார் வாஜ்பாய்.

ஜெ. பேச்சு:

முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், வாஜ்பாய் பின்னால் தமிழகம் அணிவகுத்து நிற்கிறது. மத்திய மாநிலநட்புறவுக்கு சிறந்த உதாரணமாக எனது தலைமையிலான தமிழகமும், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும்விளங்கும்.

பா.ஜ.க.- அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் வலிமையான தமிழகத்திற்கும், உறுதியானஇந்தியாவுக்கும் வித்திடும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வார்வாஜ்பாய். மக்கள் நலத் திட்டங்களுக்குத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வாஜ்பாய் நடவடிக்கை எடுப்பார்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+