சோனியா-- கருணாநிதி இன்று கூட்டாக பிரசாரம்
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இன்று சென்னை தீவுத் திடலில் நடைபெறும் தேர்தல்பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் கூட்டாகப் பிரசாரம்செய்கிறார்கள். இதையொட்டி மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான காங்கிரசார் சென்னையில்குவிந்துள்ளனர்.
சோனியா காந்தி வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களானஜனார்த்தனன் ரெட்டி, தல்ஜீத் சிங் ஆகியோர் முன்னதாக சென்னை வந்து தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனுடன்ஆலோசனை நடத்தினர்.
இன்று மாலை 6 மணிக்கு சோனியா காந்தி விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்துநேராக அண்ணா அறிவாலயம் செல்லும் அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார்.
பின்னர் இரவு 7 மணிக்கு தீவுத் திடல் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோர்பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சோனியா, கருணாநிதி இருவரும்இசட் பிரிவு பாதுகாப்பு பெற்றவர்கள் என்பதால் தீவுத்திடலில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி இன்றிரவே டெல்லி திரும்புகிறார்.
சோனியாவுடனான கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று பொத்தாம் பொதுவாகக்கூறப்பட்டுள்ளது.
ஆனால், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனத்திலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர்பகுதியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்த இருவரும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதியானதகவல் இல்லை. இருவரும் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், அவர்கள் சோனியாவுடன் மேடை ஏறுவதுதவிர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சோனியாவுடன் மேடையேற வைகோவும் ராமதாசும் ஆர்வம் தெரிவித்ததாகவும், ஆனால், ஒரே மேடையில்இவர்கள் ஏறுவதை அதிமுக-பா.ஜ.க. பிரச்சார ஆயுதமாக்கலாம் என்பதால் காங்கிரஸ்- திமுக ஆலோசனை நடத்தி,தர்மசங்கடத்தைத் தவிர்ப்பது என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்தும் கார், வேன், பஸ்களில்சென்னையில் குவிந்து வருகின்றனர்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications