திமுகவினர் மீதான தாக்குதல்: எஸ்.எஸ்.சந்திரனுக்கு முன் ஜாமீன்
சென்னை:
திமுகவினரைத் தாக்கிய வழக்கில் நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம்முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 1ம் தேதி சேலம் அருகே கன்னங்குறிச்சியில் எஸ்.எஸ்.சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது திமுக தலைவர்கருணாநிதியைத் தரக்குறைவாக பேசியதற்கு, அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களைப் பார்த்துபோங்கடா.. வாங்கடா என எஸ்.எஸ். சந்திரன் மைக்கில் ஒருமையில் திட்டவே, மேடையை நோக்கி திமுகவினர்சைக்கிள்களை தூக்கி வீசினர்.
இதனையடுத்து திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது எஸ்.எஸ்.சந்திரனின் காரில் இருந்த அரிவாள்கள், உருட்டுக் கட்டைகள் களமிறக்கப்பட்டன. திமுகவினர் பலருக்கும் அடி,உதை, வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக இரு தரப்பிலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தேர்தல் கமிஷனின் பார்வைக்கும் திமுக இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றது. இதையடுத்து எஸ்.எஸ். சந்திரன்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விடுவித்தனர். மேடையில் பேசும்போது எஸ்.எஸ்.சந்திரன் குடிபோதையில்இருந்ததாக போலீசாரே கூறியுள்ளனர்.
இந் நிலையில் திமுகவினர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் தன்னை மீண்டும் கைது செய்தால் (தேர்தல்கமிஷன் நெருக்கும் பட்சத்தில்) முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.எஸ்.சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் எஸ்.எஸ்.சந்திரனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கினார்.எஸ்.எஸ். சந்திரன் வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அங்குள்ள முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications