தேர்தல் அதிகாரிகள் போர்வையில் அதிமுகவினர்: திமுக புகார்
சென்னை:
அரசு அதிகாரிகள் போல போலியாக நடித்து தேர்தல் பணிகளில் அதிமுகவினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகதேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு திமுக ஒருங்கிணைப்புச் செயலாளர்டி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பியுள்ள புகாரில், அரசு ஊழியர்கள் என்று கூறி சில அதிமுகவினரும், அவர்களதுகுடும்பத்தினரும், தேர்தல் பணியாற்றுவதற்கான உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள உண்மையான அரசு ஊழியர்களுக்குப் பதில் இந்த போலிஅரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானஅதிமுகவினர் இதுபோல போலி தேர்தல் அரசு ஊழியர்களாகவும், தேர்தல் அதிகாரிகளாகவும் ஊடுறுவியுள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்களுக்குரிய பயிற்சி வகுப்புகள்முடிந்த நிலையிலும், இன்னும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.
ஊழியர் சங்கம் புகார்:
இந் நிலையில் தமிழகத்தில் 13 நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தி அனுபவப்பட்ட மாநில அரசு ஊழியர்களைஇந்த முறை தேர்தல் ஆணையம் சரிவரப் பயன்படுத்தாமல் புறக்கணிப்பதாக தமிழக அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் முத்துசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், கடந்த 13 நாடாளுமன்றத் தேர்தல்களை திறம்பட நடத்திய அனுபவம் மிக்கவர்கள் தமிழகஅரசு ஊழியர்கள். ஆனால் இந்த முறை அவர்களை தேர்தல் ஆணையம் சரிவரப் பயன்படுத்தாமல், பலஇடங்களில் மத்திய அரசு ஊழியர்களை நியமித்துள்ளது.
மேலும், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மாநில அரசு ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு இன்னும் பணிநியமன உத்தரவுகளை வழங்காமல் தேர்தல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். இதுதவிர தபால்ஓட்டுக்களை அரசு ஊழியர்கள் பெறுவதிலும் இழுபறி நீடிக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications