இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்: இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

கோடை மழை காரணமாக வெப்பநிலை இதமாக மாறியுள்ளதால், இதுவரை மாலையில் மட்டுமே பிரசாரம்செய்துவந்த தலைவர்கள் இன்று காலை 8 மணிக்கே தங்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர்.

துணைப் பிரதமர் அத்வானி சிதம்பரம் தொகுதி விருத்தாசலத்திலும், புதுவையிலும் பிரசாரம் செய்கிறார். அவரதுபிரசாரத்தில் அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசனும் கலந்து கொள்கிறார்.

பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு வடசென்னைத் தொகுதியில் விருகம்பாக்கம், அம்பத்தூர், திருவொற்றியூர்,கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா தனது இறுதி பிரசாரத்தை தென் சென்னை தொகுதியில் முடிக்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன்சாலை, வி.எம். தெரு, நாகாத்தம்மன் ஆலயம், சேக் தாவூத் தெரு, மைலாப்பூர், மந்தைவெளி, காமராஜர் சாலை,கிரீன்வேஸ் சாலை, அடையாறு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு, கோட்டூர்புரம் பொன்னியம்மன்கோயில் அருகே தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் இன்றுபிரசாரம் மேற்கொள்கிறார்.

ஆயிரம் விளக்கு, ஜானி ஜான்கான் சாலையில் பிரசாரத்தைத் தொடங்கி, திருவல்லிக்கேணி, மையிலாப்பூர், சைதை,கோட்டூர்புரம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர், புரசைவாக்கம், புளியந்தோப்பு, சத்தியமூர்த்தி நகர்,அசோக் பில்லர், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு, துறைமுகம், தம்புசெட்டித் தெரு ஆகிய இடங்களில் பிரசாரம்செய்கிறார். சிந்தாதிரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கோவைத் தொகுதியில் பிரசாரத்தை முடிக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் தொகுதியிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிவகாசிதொகுதியிலும் தங்களது இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் நாகர்கோவில் தொகுதியிலும், தி.க. தலைவர்கி.வீரமணி, நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+