அதிமுக-பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வும்: வாசன்
சென்னை:
அதிமுக-பாஜக கூட்டணி மாபெரும் தோல்வியடையும் என காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
நிருபர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
22 கட்சிகளுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.கவுடன் இப்போது 8 கட்சிகள் மட்டுமே உள்ளன. விரைவில் பிறகட்சிகளும் விலகி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டதால் தான் 8 மாதத்துக்கு முன்பே தேர்தலை சந்தித்தனர்.
ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு பாதகமாகப் போகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை 3 மாதத்துக்கு முன்பு வரை கூட வாஜ்பாயை ஜெயலலிதா மிகக் கடுமையாகவிமர்சித்தார். படு கேவலமாக சட்டமன்றத்தில் பேசினார். இப்போது அவருடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.கவின்பலவீனத்தை தெளிவாகக் காட்டிவிட்டது.
ஜெயலலிதா மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவு வரும் நிலையில் பா.ஜ.க அவரோடு சேர்ந்து இங்குமண்ணைக் கவ்வப் போகிறது. சோனியவை ஜெயலலிதா மிக மோசமாக விமர்சித்ததை பெண்கள் ஏற்கவில்லை.ஜெயலலிதாவை மட்டமாகப் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் நடந்து வருவது ஒரு மெளனப் புரட்சி. ஓட்டுப் பதிவின்போது அந்த புரட்சி வெடிக்கும். அதில்அதிமுக-பா.ஜ.க. கூட்டணி தூளாகும் என்றார் வாசன்.
இல.கணேசன் பேட்டி:
இந் நிலையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை உணர்ந்து வாக்களிக்கவேண்டும். இந்தியர் தான் பிரதமராக வேண்டும் எனபது உணர்வுப்பூர்வமானது. இதற்கு மக்கள் ஆதரவும் உள்ளது.
சாதனைகளைச் சொல்லித் தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.
தேர்தலுக்குப் பிறகு தான் யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் என கருணாநிதி கூட சொல்லிவிட்டார்.இதனால் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையப் போவதை அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி கணிசமான வெற்றி பெறும் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications