வாக்காளர்களுக்கு பணம்: மதிமுக பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சீபுரம் & தஞ்சாவூர்:
காஞ்சிபுரத்தில் ஓட்டுச் சாவடிக்கு அருகே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த, மதுராந்தகம் வடக்கு மதிமுகஒன்றிய செயலாளர் முருகன் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்திக்காக முருகன் தேர்தல் பணியாற்றி வந்தார். இவர் இன்றுகாலை அத்திமானம் கூட்டு ரோட்டில் உள்ள ஓட்டுச் சாவடி அருகே நின்று கொண்டு வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து பாமகவுக்கு ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட தேர்தல் பார்வையாளர் ராவ், முருகனைக் கைது செய்ய உத்தரவிட்டார். அவரிடமிருந்து ரூ.6,350பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திமுக வேலை: அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்:
இந் நிலையில் தஞ்சாவூர் அருகே திமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்த ஒரு ஆசிரியரும், கூட்டுறவுத்துறைஊழியர் ஒருவரையும் சஸ்பெண்ட் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications