பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு எந்திரங்கள்
சென்னை:
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. தேர்தலுக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன்வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் தென் சென்னை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களும், மாநிலக் கல்லூரிமற்றும் ராணி மேரிக் கல்லூரியில் வட சென்னைக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களும், லயோலா கல்லூயில் மத்திய சென்னைதொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகரக் காவல்துறை ஆணையர் நடராஜ்கூறுகையில், வாக்கு எண்ணும் மையங்களில், மையங்களின் காம்பவுண்டுக்கு வெளியே, உள்ளே மற்றும் வாக்குப் பதிவுஇயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு என 3 கட்டமாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட அடையாறு துணை காவல் ஆணையர் ஆயுஷ் மணி திவாரி செய்தியாளர்களிடம்பேசுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல, தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குசீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 13 தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications