சூடு பிடித்தது டெல்லி அரசியல் களம்: மாற்றுக் கூட்டணி கட்சிகளுக்கு வலை வீசும் பா.ஜ.க.-காங்.
டெல்லி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்-பா.ஜ.க. கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்துடெல்லியில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
முன்னதாக வெளியான கருத்துக் கணிப்புகளின்படி ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம்-பா.ஜ.க.கூட்டணிக்கு 100 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், மக்களவைத் தேர்தலில் 18 இடங்கள் வரை கிடைக்கும்என்றும் கூறப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்துவிட்டன. தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 49 இடங்களேகிடைத்துள்ளன. இதன் அடிப்படையிலான ஓட்டு விகிதத்தை வைத்துப் பார்த்தால் மக்களவைத் தேர்தலில் 7இடங்கள் மட்டுமே இக் கூட்டணிக்குக் கிடைக்கு என்று தெரிகிறது.
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி பெறுவதில் பா.ஜ.க. கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படும்நிலையில், ஆந்திராவில் 11 இடங்கள் வரை சரிவு ஏற்பட்டால் அது இக் கூட்டணியின் ஆட்சி அமைக்கும்வாய்ப்பை அதிக அளவில் பாதிக்கும்.
ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. கூட்டணிக்கு 230 முதல் 250 வரை கிடைக்கும்என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதில் ஆந்திராவின் 18 இடங்களும் அடக்கம். இப்போது 18க்குப் பதில்7 இடங்களில் மட்டும் தெ.தேசம்-பா.ஜ.க. கூட்டணி வென்றால், மேலும் 11 எம்.பிக்கள் குறைவார்கள்.
இதனால் பா.ஜ.க. தரப்பில் கவலையும், காங்கிரஸ் தரப்பில் மகிழ்ச்சி அலையும் பரவியுள்ளது.
இந் நிலையில் நேற்று முதல் டெல்லியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. ஆந்திர முடிவுகளை அடுத்துகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள்சந்தித்துப் பேசினர்.
மகாராஷ்டிரத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேசினார். அப்போது பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தர மாட்டேன் என சோனியாவிடம்பவார் உறுதியளித்ததாகத் தெரிகிறது.
அதே போல திமுக தலைவர் கருணாநிதியையும் சோனியா தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங்குடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தும்காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டியும் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம், எக்காரணம் கொண்டு பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கமாட்டேன் என்றார்.
இதே போல மாயாவதியுடன் பா.ஜ.க. பேசி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகிய ஹரியாணாமுதல்வர், பரூக் அப்துல்லா ஆகியோரையும் பா.ஜ.க. தொடர்பு கொண்டு வருகிறது.
இந்த வேலைகளில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரமோத் மகாஜன், சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இவர்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாது என்பதால் இந்தக் கட்சிகளை வளைக்க காங்கிரசும், பா.ஜ.கவும் அதி தீவிரமாக முயன்று வருகின்றன.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பா.ம.க, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகளை இழுத்துவிட முடியும்என பா.ஜ.க நம்புகிறது. அதே போல பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் ஆதரவைப் பெற்றுவிடமுடியும் என காங்கிரஸ் நம்புகிறது.
நாளை காலை 12 மணிக்கு தேசிய அளவிலான தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும். அடுத்தசில மணி நேரங்களில் அரசியல்வாதிகளின் குதிரை வியாபாரம் தொடங்கிவிடும்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications