பதவியேற்ற அதே நாளில் ஜெவுக்கு கிடைத்த பெரும் தோல்வி
சென்னை:
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று இன்றுடன் 3-வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த நாளில் தமிழகமக்கள் ஜெயலலிதாவுக்கு மறக்க முடியாத பரிசைத் தந்துள்ளனர்.
பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருந்த நிலையில் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முதல்வராகப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே எதிர்க் கட்சிகளுக்கு எதிரான தனது செயல்பாடுகளைத் தொடங்கினார்ஜெயலலிதா. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்தமுரசொலி மாறன் போலீஸாரால் தாக்கப்பட்டார்.
சென்னை மெரீனா கடற்கரையில் திமுகவினர் நடத்திய பேரணியில் அப்போதையே போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன்- சுட்டுக் கொல்லப்பட்ட ரெளடி வீரமணி உதவியுடன் அதிமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். பலர் ரெளடிக் கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டனர்.
சென்னை கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது. ராணி மேரிக் கல்லூரியைஇடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடிய மாணவிகளை கல்லூரி நிர்வாகமும்,காவல்துறையும் கடுமையாக நடத்தியது.
மாணவிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் வீடு புகுந்துகாவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வேலைநிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள் மீது வரலாறு காணாத அடக்குமுறையை ஜெயலலிதா அரசுபிரயோகித்தது. ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள்வீடு புகுந்து கைது செய்யப்பட்டனர். பெண் அரசு ஊழியர்கள் ஓட ஓட விரட்டிக் கைது செய்யப்பட்டனர்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தார் ஜெயலலிதா.இதனால் ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காமல் போய் விவசாயிகள் எலிக்கறி திண்ணும் நிலை ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா தாக்கிப் பேசியது காங்கிரஸ்கட்சியினரை மட்டுமல்லாது தமிழக பெண்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீது வெறுப்புணர்வை அதிகப்படுத்திவிட்டது.
மத மாற்ற தடைச் சட்டம், ஆடு-கோழி பலிக்குத் தடை என மக்களால் விரும்பப்படாத பல்வேறு சட்டங்களைக்கொண்டு வந்ததும் ஜெயலலிதா மீதான வெறுப்பை அதிகரித்தது.
நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினர் கடுமையான கஷ்டத்திற்குள்ளாகினர். எல்லவாற்றிற்கும்மேலாக தண்ணீர்ப் பிரச்சினையால் தமிழகவே வறண்டு போனது. அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியையும்சம்பாதித்துக் கொண்ட ஜெயலலிதா, இந்தியாவிலேயே மோசமான முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார்.
பா.ஜ.க. உள்பட எந்த கட்சியையும் மதிக்காமல் அனைவரையும் கேவலமாக நடத்தினார்.
எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்தமாக இன்றைய தேர்தல் முடிவு மூலம் ஆணித்தரமாக பதிலளித்து விட்டனர் தமிழகமக்கள்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications