ஜக்குபாய் கதை விவாதம் திடீர் நிறுத்தம்: வெளியூர் கிளம்பும் ரஜினி
சென்னை:
ரஜினி தனது அடுத்த படமான ஜக்குபாயின் கதை விவாதத்தை திடீரென நிறுத்திவிட்டு ஹைதராபாத்துக்குச்சென்றுவிட்டார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், நடிகர் ரஜினிகாந்த்திற்கும் இடையே நடந்துவந்த நிழல் யுத்தத்தின் முதல் சுற்றில் ராமதாஸ் வெற்றி பெற்றுள்ளார்.
பாபா படத்தில் ஆரம்பித்த பிரச்சினை பெரிதாகி பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அந்தக் கட்சியைத் தோற்கடிக்க சபதம்பூண்டார் ரஜினிகாந்த். தனது ரசிகர்களையும் அந்தத் தொகுதிகளில் களம் இறக்கி விட்டார்.
அத்தோடு நிருபர்களை அழைத்து பா.ஜ.க-அதிமுகவை ஆதரிப்பதாக மனம் திறந்தார். அப்போது வன்னியர்களிடம் நியாயம்கேட்பது போல உருக்கமாக பேட்டி அளித்தார். ரஜினியின் பேட்டியால் பாமக வேட்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம்என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஓட்டு போட்டுவிட்டு வந்த ரஜினி, இரட்டை இலைக்கு வாக்களித்தேன் என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் ரஜினிக்கு பெரும்அதிர்ச்சியைத் தந்துள்ளன. பாமக போட்டியிட்ட 6 இடங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் ரஜினியின் ஆதரவை தனிப்பட்ட முறையில் பெற்றதாக கூறப்படும் தர்மபுரி, பாண்டிச்சேரி பாஜக வேட்பாளர்களுக்குபெரும் தோல்வி கிடைத்துள்ளது, பாமகவினரிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் நேற்று வரை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் வீட்டில் நடந்த ரஜினியின் ஜக்குபாய் கதை விவாதம் திடீரெனநிறுத்தப்பட்டுவிட்டது. இன்று ரஜின் ஹைதராபாத் செல்கிறார்.
கதை விவாதம் நிறுத்தப்பட்டுவிட்டதால் ரவிக்குமாரும் நாளை குடும்பத்துடன் மலேசியா, சிங்கப்பூருக்கு டூர் கிளம்புகிறார்.
இதனால் இந்தப் படத் தயாரிப்புப் பணிகள் இப்போதைக்கு நிறுத்தப்படுகின்றன.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications