முரசொலி மாறன் வீட்டில் குடியேறும் வாஜ்பாய்
டெல்லி:
பா.ஜ.கவின் தோல்வியையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய வாஜ்பாய் வீடு மாறுகிறார்.
பிரதமருக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட எண் 7, ரேஸ் கோர்ஸ் இல்லத்தைஅவர் காலி செய்கிறார்.
அங்கிருந்து எண் 8, கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் குடியேறுகிறார். இந்த இல்லத்தில் தான்மறைந்த முன்னாள் மத்திய திமுக அமைச்சர் முரசொலி மாறன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லமும் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பகுதியில் தான் அமைந்துள்ளது.
தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வசித்து வரும் எண் 10, ஜன்பத் இல்லம் பெரும் கூட்டங்களைசமாளிக்கும் வகையில் இல்லை. மேலும் பிரதமருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுளும் அங்கு செய்வது கடினம்என்பதால் சோனியா காந்தி ரேஸ்கோர்ஸ் இல்லத்துக்கு குடிபெயர உள்ளார்.
அதிமுக.. அத்வானி..:
இந் நிலையில் மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக வாஜ்பாயே இருப்பார் என பதவி விலகிச் செல்லும் துணைப் பிரதமர் அத்வானி தெரிவித்தார்.
இந்தப் பொறுப்பை ஏற்க வாஜ்பாய் ஆர்வம் காட்டவில்லை என்பதும், இந்தப் பதவி அத்வானிக்கே தரப்படவேண்டும் என ஆர்.எஸ்.எஸ்சும் வி.எச்.பியும் பா.ஜ.கவை நெருக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணமா எனநிருபர்கள் அத்வானியிடம் கேட்டபோது, பதிலளித்த அவர், அப்படியெல்லாம் ஏதும் இல்லை. அப்படி நாங்கள்நினைக்கவே இல்லை என்றார்.
பந்த் ராஜினாமா:
பா.ஜ.கவின் தோல்வியையடுத்து அக் கட்சியால் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட கே.சி.பந்த்தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications