காங். மக்களவை தலைவராக சோனியா தேர்வு; பிரதமராகிறார்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக சோனியா காந்தி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து தனது தலைமையில் விரைவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்கு என சோனியா அறிவித்தார்.
வெளிநாட்டுக்காரரான சோனியவை பிரதமராக ஏற்பதில் சரத்பவார் உள்ளிட்ட சில கூட்டணக் கட்சித்தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், இதனால் மன்மோகன் சிங் அல்லது பிரணாப் முகர்ஜி போன்றஉள்ளிட்ட மூத்த தலைவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், சோனியாவை பிரதமராக ஏற்க கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் முன் வந்தால் அதை தானும் ஏற்பதாகசரத்பவார் கூறிவிட்டார்.
அதே போல சோனியாவை பிரதமராக ஏற்கத் தயார் என இடதுசாரிகளும், மதிமுகவும் நேற்று அறிவித்தன.கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ், திமுக, பா.ம.க, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும், காங்கிரஸ் அரசுஅமைய ஆதரவு தெரிவித்துள்ள மாயாவதியும் சோனியாவை பிரதமராக முன்பே ஆதரவு தெரிவித்துவிட்டனர்.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சோனியா பிரதமராக ஆதரவு தெரிவித்ததையடுத்து சோனியா காந்தி இன்றுகாங்கிரஸ் கட்சியின் மக்களைவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராகத் தேர்வானவுடன்நிருபர்களிடம் பேசிய சோனியா,
விரைவில் எனது தலைமையில் காங்கிரஸ் அரசு பதவியேற்கும்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடன் பா.ஜ.க. அரசு நடத்தி வந்த மதவாத ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.இந்தியாவின் இதயம் மதசார்பில்லாதது. அன்பும், பண்பும் நிறைந்தது. அதைக் கெடுக்க முயன்ற பா.ஜ.க. அரசுக்குமக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள்.
தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து எதிர்க் கட்சியினரைத் தாக்குவது, ஆணவ அரசியல் ஆகியவற்றுக்கும் மக்கள்சாவு மணி அடித்துள்ளார்கள்.
எங்களை மக்கள் தேர்வு செய்துள்ளது எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல, மக்களின்தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் என்பதை நாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம் என்றார் சோனியா.
இதற்கிடையே இத்தாலியரான சோனியா, பிரதமராவது நாட்டுக்கே அவமானம் என ஆர்.எஸ்.எஸ். கருத்துதெரிவித்துள்ளது. இதை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அக் கட்சிகூறியுள்ளது.
அதே போல சோனியா பிரதமராகாமல் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்களுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைவரும் மத்தியப் பிரதேச முதல்வருமான உமா பாரதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
வெளிநாட்டைச் சேர்ந்த சோனியா பிரதமராவது வருத்தம் தருகிறது, பிறப்பால் இந்தியருக்கும், இந்தியர்ஆனவருக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்றார்.
சோனியா பிரதமராவது கவலை தருவதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
இந் நிலையில் மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான ஜோதிபாசுவை டெல்லியில்சோனியா இன்று நேரில் சென்று சந்தித்தார். அப்போது கம்யூனிஸ்ட்டுகளும் அமைச்சரவையில் பங்கேற்கவேண்டும் என சோனியா கோரிக்கை விடுத்தார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களைச் சந்தித்த ஜோதிபாசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இப்போது ஒருஇந்தியர். இங்கே அவர் ரோமாபுரியை உருவாக்கிட மாட்டார் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications