ஆண்டிப்பட்ட தவிர அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக வாக்குகள் சரிவு!
சென்னை:
மக்களவைத் தேர்தலில், சட்டசபைத் தொகுதிகளைப் பொருத்தவரை, ஆண்டிப்பட்டி தொகுதியைத் தவிர மீதமுள்ள 233தொகுதிகளிலும் அதிமுகவுக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் அக்கட்சி லட்சக்கணக்கானவாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளது. அதனுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பாஜகவும் 6 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
மாநிலத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் அடங்கியுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதியைத் தவிர வேறு எல்லா தொகுதிகளிலும் அதிமுகவின் வாக்குசரிந்துள்ளது. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகளே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன.
ஆண்டிப்பட்டியில் (பெரியகுளம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது) மட்டுமே அதிமுக வேட்பாளர் தினகரன், தன்னைஎதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணை விட கூடுதல் ஓட்டுப் பெற்றுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் ஆரூணை விட தினகரனுக்கு கூடுதலாக 12,723 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆனால், பெரியகுளம்மக்களவைத் தொகுதியில் அடங்கிய மற்ற 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆரூணுக்கே அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் ஆரூணுக்கு 12,000 வாக்குகள் அதிகமாகக்கிடைத்துள்ளது.
இதேபோல, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்டு மன்னார்கோவில் சட்டசபைத் தொகுதியில், பாமக வேட்பாளர்பொன்னுச்சாமியை விட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் 921 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றுள்ளார். இங்குஅதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications