சோனியாவுடன் கருணாநிதி சந்திப்பு: ஆட்சியமைக்க முழு ஆதரவு
டெல்லி:
இன்று காலை டெல்லி சென்ற திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார். அப்போது சோனியா பிரதமராக தனது முழு ஆதரவை கருணாநிதி தெரிவித்தார்.
அதே நேரத்தில் பொடா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும்,காவிரியில் தமிழகத்துக்கு நீர் கிடைக்கச் செய்ய வேண்டும், நெசவாளர்களுக்கு எதிரான சென்வாட் வரியைஉடனடியாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் சோனியாவிடம் கருணாநிதி முன் வைத்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்திறங்கிய கருணாநிதிக்கு, மேள தாளங்களுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,திமுக தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.
பின்னர் சோனியாவின் ஜன்பத் இல்லத்திற்கு டி.ஆர்.பாலு, தயாநிதி மாறனுடன் வந்த கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர்கமல்நாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
வீட்டு வாயிலில் கருணாநிதியை சோனியா வரவேற்றார். பின்னர் இருவரும் 45 நிமிடங்கள் பேச்சு நடத்தினர். சந்திப்பின்போதுகமல்நாத், வாசன், பாலு, தயாநிதியும் உடனிருந்தனர். அப்போது தமிழகத்தில் பெரும் வெற்றி தேடித் தந்ததற்காக கருணாநிதிக்குசோனியா நன்றி தெரிவித்தார்.
குறைந்தபட்ச செயல் திட்டம், பொடா ரத்து, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, காவிரி, சென்வாட் வரி ரத்து ஆகியவைஉள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.
அப்போது அமைச்சரவையில் திமுக பங்கேற்க வேண்டும் என சோனியா வலியுறுத்தினார். இதையடுத்து து தனது நிலையில்இருந்து இறங்கி வந்த கருணாநிதி, அது குறித்து யோசித்து பதில் சொல்வதாகத் தெரிவித்தார். (அமைச்சரவையில் இப்போதைக்குசேருவதில்லை என திமுக நேற்றிரவு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது)
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின் டெல்லி நிருபர்களிடம் கருணாநிதி தமிழில் பேச, அதை தயாநிதி மொழிபெயர்த்தார்.கருணாநிதி கூறியதாவது:
சோனியா காந்தி பிரதமராக திமுகவின் முழு ஆதரவைத் தெரிவித்தேன். குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமிடம்வழங்குவதற்காக திமுகவின் ஆதரவு கடிதத்தை சோனியாவிடம் தந்துவிட்டேன்.
அமைச்சரவையில் சேர முடியாது என்று திமுக சொல்லவில்லை. ஆனால், இது குறித்து முடிவு செய்ய எங்களுக்கு கூடுதல்அவகாசம் தேவை என்று சோனியாவிடம் கூறியிருக்கிறேன். கட்சியின் செயற்குழுத் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பொடாவை நீக்கக் கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, நிச்சயமாகக் கோருவேன் என்றார். அமைச்சரவையில் சேரஎவ்வளவு கால அவகாசம் தேவை என கேட்டதற்கு, சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை என்றார் கருணாநிதி.
இதையடுத்து கிளம்பிச் சென்ற கருணாநிதி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிசன்சிங்சுர்ஜித் ஆகியோரை சந்திப்பார் என்று தெரிகிறது.
மாலை சோனியாவின் இல்லத்தில் நடக்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் கருணாநிதி பங்கேற்கிறார்.
முன்னதாக இன்று காலையில் 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளுஅம்மையார், மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தென் சென்னை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன்சென்றனர். விமான நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் கருணாநிதியை வழியனுப்பி வைத்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று பின்னர் வெளியேறிய பிறகு, கருணாநிதி பல ஆண்டு நீண்ட இடைவெளிக்குப்பிறகு டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது. சோனியா தலைமையில் ஆட்சி அமைந்த பின்னரே கருணாநிதி சென்னை திரும்புவார்என்று தெரிகிறது.
இதற்கிடையே நாளை ஜனாதிபதி கலாமை சந்திக்கவுள்ள சோனியா ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.இதையடுத்து நாளை மறுதினமே சோனியா பிரதமராகப் பதவியேற்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆட்சி அமைக்க 272 தேவை என்ற நிலையில் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள், இடதுசாரிகள், முலாயம் சிங்கின்சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் 300 எம்.பிக்கள் ஆதரவுடன் ஆட்சிஅமைக்கவுள்ளார் சோனியா.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications