சோனியா பிரதமரா?: உமா பாரதி ராஜினாமா
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசமுதல்வர் உமா பாரதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இன்று தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் வழங்கினார்.சோனியா பிரதமராவதற்கு எதிராக தேசிய அளவில் போராட்டத்தைத் தொடகப் போவதாக அவர்அறிவித்தார்.
முன்னதாக அவர் நேற்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து, சோனியா பிரதமராகஅனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.
கலாமுடன் சுஷ்மா சந்திப்பு:
இந் நிலையில் அப்துல் கலாமை சந்தித்த பா.ஜ.க. தலைவரான சுஷ்மா சுவராஜும் இன்று சந்தித்துசோனியா காநதி பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று கோரினார்.
தனது ராஜ்யசபா பதவியையும் அவர் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
சோனியாவுக்கு எதிராக வழக்கு:
இந் நிலையில் வெளிநாட்டில் பிறந்த சோனியா இந்தியப் பிரதமராகக் கூடாது என்று தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இம் மனு மீதுவரும் 26ம் தேதி விசாரணை நடக்கும் என தலைமை நீதிபதி படேல், நீதிபதி அகமத் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அறிவித்துள்ளது.
தொண்டர்கள் தற்கொலை முயற்சி:
இந் நிலையில் போபாலில் சிவசேனைத் தொண்டர்கள், சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்றுகூறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனர். அவர்களை போலீசார்தடுத்து கைது செய்தனர்.
பாஜக மீது மார்க்சிஸ்ட் கடும் தாக்கு:
தேர்தலில் பா.ஜ.க. தோற்றுவிட்டாலும் சோனியா காந்தி பிரதமராவதைத் தடுக்க அனைத்துவகையான சதிகளிலும் அக் கட்சி ஈடுபட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத்சாட்டர்ஜி கூறினார்.
சுஷ்மா, உமாவைத் தூண்டிவிட்டு முன்னாள் நின்று போராட்டம் நடத்த வைத்துவிட்டு வாஜ்பாய்,அத்வானி போன்றவர்கள் அமைதியாக இருப்பது போல நடிப்பது பா.ஜ.கவின் உச்சகட்ட சதிஎன்றார் சாட்டர்ஜி.
இதன்மூலம் மக்கள் தந்த தீர்ப்பை பா.ஜ.க. கேவலப்படுத்த முயல்கிறது என்றார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications