கேபிள் இல்லாமல் 30 சேனல்கள்: தூர்தர்ஷன் அறிவிப்பு
சென்னை:
கேபிள் இல்லாமல் சாட்டிலைட் மூலம் நேரடியாக 20 தூர்தர்சன் சேனல்களையும் 10 தனியார் சேனல்களையும்டி.விக்களுக்கு ஒளிபரப்பும் திட்டத்தை தூர்தர்ஷன் அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. வீட்டில் சிறிய டிஷ்ஆண்டெனா வைத்து இந்த டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திடீர் திடீர் என்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட செட்-டாப் பாக்ஸ் திட்டமும் சரிவரநடைமுறைபடுத்தப்படவில்லை.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு கேபிள் இல்லாமல் நேரடியாக டி.வி. நிகழ்ச்சிகளை வழங்கும் திட்டத்தைதூர்தர்ஷன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தலைமைப் பொறியாளர் மோகன்தாஸ் நிருபர்களிடம்கூறியதாவது:
டி.வி. நிகழ்ச்சிகள் நேயர்களை சென்றடைவதில் எந்த வித குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்,தூர்தர்சன் டி.வி. நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
தூர்தர்ஷனின் 20 சேனல்களையும், 10 தனியார் சேனல்களையும் சாட்டிலைட் மூலம் ஒளிபரப்ப முடிவுசெய்துள்ளோம். இது குறித்து தனியார் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இத் திட்டத்தின்படி டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செயற்கைக்கோள் மூலம் தூர்தர்சன் டி.வி.நிகழ்ச்சிகள் கே.யூ. பாண்டில் ஒளிபரப்பாகும். சிறிய டிஷ் ஆண்டெனாக்களை வாங்கி பொருத்துவதன் மூலம்துல்லியமாக நிகழ்ச்சிகளைக் காணலாம்.
இந்த திட்டத்துக்கு ரூ. 165 கோடி செலவிடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் கட்டணம் எதுவும் செலுத்தத்தேவை இல்லை.
வெகு விரைவில் வெளி மார்க்கெட்டில் டிஷ் ஆண்டெனாக்கள் ரூ. 500-க்கும், செட்-டாப் பாக்ஸ் ரூ. 4 ஆயிரத்துக்கும்விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
தூர்தர்சனின் இந்தத் திட்டத்துக்கு டி.வி. நேயர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications