பிரதமராக மறுத்தார் சோனியா: முடிவை மாற்றக் கோரி எம்.பிக்கள் போராட்டம்
டெல்லி:
பிரதமர் பதவி ஏற்க முடியாது என காங்கிரஸ் எம்.பிக்கள் மத்தியில் பேசிய அக் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எம்.பிக்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சோனியாவை வற்புறுத்திவருகின்றனர்.
நேற்று காலை முதல் சோனியாவின் தயக்கம் குறித்து அரைகுறையாக செய்திகள் கசிந்தவண்ணம்இருந்தன. இதையடுத்து ஆயிரக்கணக்கான காங்கிரசார் சோனியாவின் இல்லத்தின் முன் திரண்டுஅவர் பிரதமராக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நேற்றிரவு காங்கிரஸ் எம்.பிக்களின்கூட்டம் நடந்தது.
அதில் பேசிய சோனியா, மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் நான் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினேன். அதில் வெற்றியும் கிடைத்துவிட்டது. எப்போதுமேநான் பிரதமராக வேண்டும் என்று நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை.
இந் நிலையில் என்னை பிரதமர் பதவிக்கு கூட்டணிக் கட்சிகளும் காங்கிரஸ் புதிய எம்.பிக்களாகியநீங்களும் தேர்வு செய்தீர்கள். ஆனால், அந்தப் பதவியை ஏற்க என் உள் உணர்வு இடம்கொடுக்கவில்லை.
என் மனசாட்சியின் குரலுக்குக் கட்டுப்பட்டே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனால் என்னையாரும் நிர்பந்திக்காதீர்கள் என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் சோனியாவை நோக்கி ஓடினர். அவர் தனது முடிவைமறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினர். அதை ஏற்க சோனியா மறுத்துக்கொண்டிருந்தபோதே மைக்கைப் பிடித்தார் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியான மணிசங்கர்அய்யர்.
அவர் பேசுகையில், உங்களை பிரதமராக்குவோம் என்று சொல்லித் தான் ஓட்டு கேட்டு ஜெயித்துவந்திருக்கிறோம். உங்களுக்கு மக்கள் தந்த கடமையில் இருந்து நீங்கள் விலகக் கூடாது என்றார்.
இதைத் தொடர்ந்து பல எம்.பிக்களும் பேசினர். பா.ஜ.க., சங் பரிவார், சுஷ்மா சுவராஜ், உமாபாரதியின் மிரட்டல்களுக்கு நீங்கள் பணியக் கூடாது என்றனர்.
சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே பேசினர். சுமார் 3 மணி நேரம் பல எம்.பிக்களும் பேசிமுடித்த பின்னர் மீண்டும் எழுந்த சோனியா, நான் என் முடிவை மறுபரிசீலனை செய்ய மாட்டேன்.பிரதமர் யார் என்ற விஷயத்தில் நான் எடுக்கும் முடிவை நீங்கள் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும்என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அடுத்த பிரதமராகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் மன்மோகன் இக் கூட்டத்தின் சோனியாவின்அருகிலேயே அமர்ந்திருந்தார்.
அவரை வைத்துக் கொண்டே, உங்களைத் தவிர வேறு யாரையும் பிரதமராக ஏற்க மாட்டோம் எனகாங்கிரஸ் எம்.பிக்கள் பேசினர்.
பிரதமர் பதவியேற்க சோனியா மறுத்ததையடுத்து அவரது இல்லத்தின் வெளியே கூடியிருந்தகாங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஒரு எம்.பி. தனது தலையில் துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகமிரட்டினார். இதையடுத்து அவர் மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துஅழைத்துச் சென்றனர்.
மேலும் சிலர் வாள்களால் உடலைக் கீறிக் கொண்டு சோனியா, பிரதமராக வேண்டும் என கோரினர்.நேற்றிரவு முழுவதுமே சோனியாவின் ஜன்பத் இல்லத்தை முற்றுகையிட்டு தொண்டர்கள் தர்ணாவில்ஈடுபட்டனர்.
இந் நிலையில் சோனியா ஏன் பிரதமர் பதவியேற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூறினார்.
சோனியா தான் பிரதமராக வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் கோரியுள்ளார். தனது முடிவைஅவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராம்விலாஸ் பாஸ்வானும் கோரியுள்ளார்.
சோனியாவின் மறுப்பு குறித்து நேற்றே கூட்டணிக் கட்சியினரிடம் குலாம்நபி ஆசாத், மன்மோகன்சிங் ஆகியோர் பேசினர். இதையடுத்து அவர்கள் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தின் இல்லத்தில் சந்தித்துஆலோசனைகள் நடத்தினர்.
மன்மோகன் சிங்கை சோனியா இன்று பிரதமராக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் சிங்குடன் சோனியா ராஷ்டரபதி பவன் சென்று ஜனாதிபதி அப்துல் கலாமை சந்திக்கலாம்என்று கூறப்படுகிறது.
இன்று அல்லது நாளை சிங் பிரதமராவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications