காங் காரிய கமிட்டி கூண்டோடு ராஜினாமா
டெல்லி:
சோனியா பிரதமராகப் பதவியேற்க மறுத்ததையடுத்து காங்கிரஸ் காரியக் கமிட்டி மற்றும் அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமாகடிதங்களை சோனியாவிடம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
அத்தோடு புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி மிரட்டினார்.
மன்மோகன் சிங்கை பிரதமராக்க கூட்டணிக் கட்சித் தலைவர்களை சோனியா சந்தித்து வரும்நிலையில், அவருக்கு கடும் நெருக்குதல் தந்து வருகின்றனர் காங்கிரசார். சோனியாவே பிரதமராகவேண்டும் என மன்மோகன் சிங்கும் கோரிக்கை விடுத்தார்.
அதே போல நாடு முழுவதுமே சோனியாவின் முடிவை எதிர்த்து காங்கிரசார் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். ரயில் மறியல், சாலை மறியல், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி எனவகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆனால், தனது முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என சோனியா திட்டவட்டமாகஅறிவித்துவிட்டார். இன்று மாலை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் எனது மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். எதற்காகநான் பிரதமர் பதவியை வேண்டாம் என்று சொன்னேன் என்பதன் அர்த்ததை புரிந்து கொள்ளுங்கள்.நான் அரசியலைவிட்டு ஒதுங்கிவிடவில்லை.
புதிய காங்கிரஸ் பிரதமருக்கு (மன்மோகன் சிங்) உங்களது முழு ஆதரவையும் தர வேண்டும்.அரசியல் என்றாலே பதவி தான் என்ற காலகட்டத்தில் வாழும் நாம், அந்த வாதத்தை பொய்யாக்கிக்காட்டுவோம். இந்தியா விரும்பும் அரசை வழங்கி மக்களுக்கு தொண்டு செய்வோம் என்றுகூறியுள்ளார் சோனியா.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications