மத ஒற்றுமை-பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியத்துவம்: சிங்
டெல்லி:
நாட்டில் அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும், சிறப்பான பொருளாதார, சமூக வளர்ச்சிக்கும்தனது அரசு பாடுபடும் என பிரதமராகப் பதவியேற்கவுள்ள டாக்டர் மன்மோகன் சிங் கூறினார்.
இன்று நிருபர்களிடம் சிங் கூறியதாவது:
நாட்டில் அனைத்து மதத்தினரிடையே அமைதியையும், பரஸ்பர அன்பையும் வளர்க்கபாடுபடுவோம். மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ நாடு பிளவுபட அனுமதிக்கமாட்டோம்.
இந்த அமைதி நிலவினால் தான் உண்மையான பொருளாதார, சமூக வளர்ச்சியை நாம் காண முடியும்.
பதவியேற்கும்போதே யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்,மத நல்லிணக்க விஷயத்தில் முந்தைய அரசு விளையாடியது. நாங்கள் அனைத்து மத ஒற்றுமைக்கும்,முழு அமைதிக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவோம்.
அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்பது தான் சரி. அதே நேரத்தில் இருமதத்தினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றால், அதை நீதிமன்றம்அனுமதித்தால், அதை என் அரசு வரவேற்கும்.
முந்தைய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காக எந்த நல்ல திட்டத்தையும் கைவிடமாட்டோம். ரூ. 58,000 கோடி செலவில் அந்த அரசு அமலாக்கிய பிரதமரின் தேசியநெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
சாலை வளர்ச்சியில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியாக வேண்டும். குறிப்பாக கிராம சாலைகளுக்குஎனது அரசு முக்கியத்துவம் தரும்.
பொதுத்துறை நிறுவனங்களை கண்ணை மூடிக் கொண்டு தனியாருக்கு விற்க மாட்டோம். லாபத்தில்இயங்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்கவே மாட்டோம். இந்த விஷயத்தில் பா.ஜ.க. அரசுஎடுத்த முடிவை ரத்து செய்வோம்.
அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், லாபகரமாக செயல்பட, முயன்றால்உதவுவோம். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலைப்பாதுகாப்பும் மிக முக்கியம். மனித நேயம் இல்லாத தனியார்மயமாக்கலால் என்ன பயன்?
சொத்துக்களை விற்றோ, பங்குகளை தனியாருக்கு விற்றோ தேவையான முதலீட்டைத் திரட்டி,தனியாருடன் போட்டியிட்டு லாபத்தில் இயங்க அந்த நிறுவனங்கள் முயலலாம்.
அதே போல பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க மாட்டோம். எல்லாவற்றையும்தனியாருக்கு விற்று, லட்சக்கணக்கான ஊழியர்களை வேலையில்லாமல் செய்வதால் யாருக்கு என்னபலன்?
தனியார்துறைக்கு இணையாக பொதுத்துறை நிறுவனங்களையும் திறம்பட செயல்பட வைப்போம்.
பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடன் என் அரசு நட்புறவை பேணும். காஷ்மீர்விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம்.
இடதுசாரிக், சமாஜ்வாடி கட்சி உள்பட அரசை ஆதரிக்கும் அனைவருமே அமைச்சரவையில்பங்கேற்க வேண்டும் என்பது என் ஆசை. ஐந்தாண்டு காலம் மிக நிலையான அரசை வழங்குவோம்.
குஜராத்தில் நீதித்துறையே முடங்கிப் போயிருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுமிகவும் சீரியசான விஷயம். இந்த விவகாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து கவனிப்பேன்.
பிரதமருக்கு இணையாக சோனியா காந்தியும் ஒரு தனி ராஜாங்கத்தை நடத்துவார் என்பதெல்லாம்சிலர் பரப்பி வரும் கதை. அவர் என் அரசுக்கு வழிகாட்டுவார். இது ஒரு கூட்டணி அரசு. அவரதுவழிகாட்டுதல் நிச்சயமாகத் தேவை.
இவவாறு மன்மோகன் சிங் கூறினார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications