கமாண்டோ படை பாதுகாப்பில் மன்மோகன் சிங்
டெல்லி:
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதியாக ஒரு விஞ்ஞானியும், பிரதமராக பொருளாதார நிபுணரும்பதவி வகிக்க உள்ளனர்.
அதே போல ஜனாதிபதி அப்துல் கலாமும் பிரதமராகவுள்ள மன்மோகன் சிங்கும் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்தவர்கள்.
மன்மோகன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்தேறிவருகின்றன.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயில் சிங், குடியரசுத் தலைவராக இருந்திருந்தாலும் பிரதமராக வருவது இதுவேமுதல்முறை எனபதால், குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகளை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் அவரது வீட்டை நேற்று முதல் ஆயிரக்கணக்கான சீக்கிய மக்கள் முற்றுகையிட்டு வாழ்த்து கோஷம்எழுப்பி வருகின்றனர்.
அரசியலில் இருந்தாலும் டெல்லியில் தனது மனைவி 3 மகள்களுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தவர்மன்மோகன் சிங். திடீரென பிரதமராக்கப்பட்டதால், அவரது வீட்டுக்கு நேற்றிரவு முதல் கமாண்டோ படைபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இன்று முதல் புல்லட் புரூப் காரும் சிங்குக்குவழங்கப்படவுள்ளது. நேற்றிரவு முதலே அவர் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுவிட்டார்.
அவரது மனைவி, மகள்களுக்கும் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications