கண்களுக்கு விருந்தளித்த வெள்ளியும், சந்திரனும் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேற்றிரவு இரவு வானத்தைப் பார்த்த பலரும் வியப்பில் விழி விரிந்தனர். சந்திரனும், வெள்ளியும் ஒரேநேர்கோட்டில், வித்தியாசமான நிலையில் காட்சி அளித்து வானில் திருவிழா நடத்தின.

வழக்கமாய் வெள்ளி கிரகம் (வீனஸ்) அதிகாலையில் தான் கண்களுக்குத் தெரியும். அதைத்தான் விடிவெள்ளிஎன்கிறோம். சில சமயங்களில் வெள்ளி முளைக்கும். பார்ப்பதற்கு நட்சத்திரம் போலவே பிரகாசமாக இருக்கும்.

நேற்றிரவு வெள்ளியும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வித்தியாசமான கோணத்தில் காணப்பட்டன. அழகியபிறையும், அதன் மேலே வெள்ளியும் காணப்பட்டது. பார்ப்பதற்கு அரிவாள் போல காணப்பட்ட இந்த அபூர்வகாட்சியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து சென்னை கோட்டூர்புரம் பெரியார் கோளரங்க செயல் இயக்குநர் அய்யாத்துரை கூறுகையில்,பிறையின் மேலே காணப்பட்டது நட்சத்திரம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது வெள்ளி கிரகம் ஆகும்.இதுபோன்ற அபூர்வ காட்சி அரிதாக நடக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+