என்ன செய்யப் போகிறார்கள் இந்த 12 பேர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 12 பேரில், 4 பேர் வெளிநாட்டில் படித்தவர்கள்.

ப.சிதம்பரம் தனது சட்டப் படிப்பை இங்கிலாந்தின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

ஐ.எப்.எஸ். அதிகாரியான மணிசங்கர அய்யர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். வெளியுறவுத் துறைஅதிகாரியான இவர் பாகிஸ்தானில் இந்தியத் தூதரகத்தில் தூதரக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தனது ஐ.எப்.எஸ். வேலையை உதறிவிட்டு காங்கிரஸ் கட்சியில்சேர்ந்தவர்.

தயாநிதி மாறன் இங்கிலாந்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மை கல்வி பயின்றவர்.

இதேபோல எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் அன்புமணி, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மேக்ரோஎக்கனாமிக்ஸ் பயின்றவர்.

ஒதுக்கப்பட்ட ஏ.கே. மூர்த்தி:

எதிர்பார்க்கப்பட்டது போலவே பா.ம.கவின் ஏ.கே. மூர்த்திக்கு அமைச்சர் பதவி தராமல் ஏமாற்றிவிட்டார்ராமதாஸ். அவருக்கு செங்கல்பட்டில் போட்டியிடவே வாய்ப்பு தரப்படாது என்று கூறப்பட்டது.

இதையடுத்து பா.ஜ.கவில் சேர்ந்து போட்டியிடக் கூட மூர்த்தி தயாரானார். மூர்த்திக்கு தனி செல்வாக்கு இருப்பதால்அவரது வெற்றியைத் தடுக்க முடியாது என்று கருதிய ராமதாஸ் கடைசியில் போட்டியிட வாய்ப்பு தந்தார்.

நேற்று அமைச்சரவை பதவியேற்பு நடந்தபோது ஜனாதிபதி மாளிகையின் அசோகா மண்டபத்தில் இரண்டாவதுவரிசையில் முகம் தொங்கிப் போய் அமர்ந்திருந்தார் மூர்த்தி.

அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி எம்.பியாகக் கூட இல்லை. திமுக,காங்கிரஸ் ஆதரவுடன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

எதிர்பார்பை நிறைவேற்றுவார்களா?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்திலிருந்து 12 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ள நிலையில் அவர்கள் முன்புபல பிரச்சினைகள் தயாராக நிற்கின்றன.

காவிரிப் பிரச்சனை, சேது சமுத்திரத் திட்டம், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை, ரயில்வே திட்டங்கள், ஜவுளித்துறைமீதான சென்வாட் வரி பிரச்சனை, பொடா என பல விவகாரங்கள் காத்துள்ளன.

பல ரயில் திட்டங்கள் முடிவடையாத நிலையில் உள்ளன. மதுரை-ராமேஸ்வரம் அகல ரயில் பாதைத் திட்டம்இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சென்னை மயிலாப்பூர், வேளச்சேரி வரையிலான ரயில் திட்டம்திருவான்மியூருடன் நிற்கிறது. இதுபோல பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன.

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளை சுத்தப்படுத்தும் பணிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதனால்அந்தப் பணிகள் தொடங்கவே இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணிக்கு வர ஒரு பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத்துறைக்கு அமைச்சராகியுள்ள தயாநிதி மாறன், கர்நாடகம், ஆந்திராவுக்குச் செல்லும் சாப்ட்வேர், ஹார்ட்வேர்,பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களை தமிழகத்துக்கு இழுத்து வர என்ன செய்யப் போகிறார் என்பதைபொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+