கருணாநிதியுடன் பிரதமர் பேச்சு: 10 நாள் அவகாசம் கோரினார்
டெல்லி:
இலாகா ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் தனது அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட திமுகஅமைச்சர்கள் பதவியேற்காததையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இன்று கருணாநிதியை தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசினார்.
முன்னதாக மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தயாநிதி மாறன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைசந்தித்துப் பேசினார். அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தும் உடனிருந்தார்.
அப்போது அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின், அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பது கடினம் என காங்கிரஸ்தரப்பில் கறாராக கூறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் திமுகவுடன் பேச்சு நடத்தி பிரச்சனையைசுமூகமாகத் தீர்க்கவே விரும்புகிறோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
கருணாநிதி மிரட்டல்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் என்னுடன் பேசினார். இலாகாவிவகாரங்களைத் தீர்க்க 10 நாட்கள் அவகாசம் தருமாறு கேட்டார். அதற்கு முன்னதாகவே முடிவெடுத்தால் நல்லது.
மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கும் முடிவைப் பொறுத்தேநாங்களும் முடிவெடுப்போம். அதே நேரத்தில் மத்திய அரசின் ஸ்திரத்தன்மைக்கு திமுகவால் எந்த பிரச்சனையும்வராது.
என்னிடம் காங்கிரஸ் தலைவர் ஜனார்தன ரெட்டி கையெழுத்திட்டு தந்த உறுதிமொழியில், டி.ஆர். பாலுவுக்குதரைவழிப் போக்குவரத்தோடு கப்பல் போக்குவரத்தும், பழனிமாணிக்கத்துக்கு வருவாய்துறையும், ரகுபதிக்குஉள்துறையில் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால்,அவையெல்லாம் மாறிவிட்டன.
இது எனக்கு மன வருத்தம் தந்துள்ளது. இதையெல்லாம் பார்க்கையில் பேசாமல் அமைச்சரவையில் சேரமாட்டோம் என்ற முடிவிலேயே திடமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சோனியாவும் விபி சிங்கும்கொடுத்த நெருக்கடியால் தான் அமைச்சரவையில் சேர்ந்தேன்.
சோனியாவை சுற்றியிருக்கும் சிலர் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு ஒதுக்கி வைப்பது நல்லது என்றார் கருணாநிதி.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications