மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட மதுரை உயர் நீதிமன்ற கிளை திறப்பு
மதுரை :
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறப்பு விழா மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. மத்தியில் ஏற்பட்டுள்ளஅரசியல் மாற்றங்களால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரூ. 35 கோடி செலவில் உயர்நீதிமன்றக் கிளை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரை வந்ததலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, 24ம் தேதி நிச்சயம் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறக்கப்படும்.
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றார்.
தலைமை நீதிபதியே உறுதியாக கூறியதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். ஆனால், திறப்பு விழா நடக்கவில்லை.
மத்தியில் புதிய அரசு பதவியேற்றுள்ளதால், புதிய சட்ட அமைச்சரையும் கலந்து பேசிய பின்னரே திறப்பு விழாநடக்கும் என்று தெரிகிறது. சட்டத்துறை இணையமைச்சர் பதவி திமுகவைச் சேர்ந்த வேங்கடபதிக்குஒதுக்கப்பட்டுள்ளது.
இலாகா விவகாரங்கள் காரணமாக திமுக அமைச்சர்கள் இன்னும் பதவியேற்கவில்லை. பிரச்சனை தீர்ந்து திமுகஅமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் வேங்கடபதியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் திறப்பு விழாவைஒத்தி வைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
ஒருவேளை வேங்கடபதி அமைச்சராகி திறப்பு விழாவில் பங்கேற்றால் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பாரா என்பதுசந்தேகமே.
கலாமுக்கு வழக்கறிஞர்கள் தந்தி:
இந் நிலையில், உயர் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியவழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்குதந்திகள் அனுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் சாமித்துரை கூறுகையில், பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளஉயர்நீதிமன்றக் கிளை, தலைமை நீதிபதி 2 முறை தேதி குறிப்பிட்டும் கூட, திறக்கப்படவில்லை,
இது தென் மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தைஏற்படுத்தியுள்ளதுஎன்றார்.
இந்த நீதிமன்றத்தைத் திறக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் முட்டுக் கட்டை போட்டு வந்ததால் பலஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது இந்தத் திட்டம். கடைசியில் கட்டடமே கட்டி முடிக்கப்பட்டபின்னரும் கூட பிற விவகாரங்களால் திறப்பு விழா தள்ளிப் போய்க கொண்டுள்ளது.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications