கேட்டது என்ன? கிடைத்தது என்ன?
சென்னை:
காங்கிரஸ் கட்சியிடம் திமுக கேட்ட இலாகாக்கள் என்ன்ென என்ற விவரத்தை அக் கட்சியின் தலைவர் கருணாநிதிவிளக்கியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ஜனார்தன ரெட்டிக்கும், எனக்கும் இடையே ஏற்பட்டஒப்பந்தத்தின் இறுதியில், ஜனார்தன ரெட்டி கையெழுத்துப் போட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரம்,
திமுகவுக்கு 3 கேபினட் இலாகாக்கள் ஒதுக்கப்படும். 1. தரைவழிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, கப்பல்போக்குவரத்து; 2. சுற்றுச்சூழல் மற்றும் வனம்; 3. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
(ஆனால், இதில் கப்பல் போக்குவரத்து பாலுவுக்குக் கிடைக்கவில்லை)
இணை அமைச்சர்களுக்கான இலாகாக்கள்:
1. நிதித்துறை (வருவாய்); 2. சட்டம் மற்றும் நீதி; 3. உள்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பெர்சனல்); 4.சமூகநீதி மற்றும் அமலாக்கம்
(இதில் உள்நாட்டுப் பாதுகாப்பு ரகுபதிக்குத் தரப்படவில்லை. பழனி மாணிக்கத்துக்கு நிதித்துறை தரப்படவில்லை,பதிலாக, வர்த்தகத்துறை தான் தரப்பட்டுள்ளது)
இதை கடிதத்தில் எழுதி கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார் ஜனார்தன ரெட்டி. ஆனால் முற்றிலும் வேறு விதமாகஎங்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் கருணாநிதி.
இந்தப் பிரச்சனையில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கைவரிசையும் இருக்கும் என கருணாநிதி கருதுகிறார். தனதுதுறையில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் இணையமைச்சராக இருப்பதை அவர் விரும்பவில்லை என்பதால், அவர்தான் பழனி மாணிக்கத்துக்கு நிதித்துறைக்குப் பதிலாக வர்த்தகத் துறையை ஒதுக்க வைத்ததாக திமுக கருதுகிறது.
திமுகவின் இந்த சந்தேகத்தால் அதிர்ந்து போன ப.சிதம்பரம் இன்று தயாநிதி மாறனுடன் சென்று பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து, திமுகவுக்கு நிதித்துறை கிடைக்க பரிந்துரைந்தது குறிப்பிடத்தக்கது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications