வீராணம் குழாய் உடைந்து வீணான குடிநீர்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீராணம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால்,வீராணத்திலிருந்து சென்னைக்குப் போக வேண்டிய நீர் வெள்ளம் போல சாலையில் ஓடி வீணாணது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம்செய்வதற்கான புதிய வீராணம் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டப் பணிகள்கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன.
நேற்று சோதனை ரீதியாக குழாய்கள் மூலம் வீராணத்திலிருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டது. அப்போது,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தரையில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிலிருந்து பல லட்சம் கேலன் தண்ணீர் வெள்ளம் போல வெளியேறியது.
அருகில் இருந்த வீடுகளுக்குள்ளும் இந்தத் தண்ணீர் புகுந்தது. சென்னைக்கு இரண்டு நாளைக்கு சப்ளைசெய்யப்படக் கூடிய அளவுக்கு தண்ணீர் வெளியேறியிருக்கலாம் என்று அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
உடைப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தரமற்ற குழாய்கள்பயன்படுத்தப்பட்டது தான் உடைப்புக்குக் காரணம் என அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications